Recharge Hike: Jio + Airtel + BSNL.. 10-12% உயரப்போகும் ரீசார்ஜ் கட்டணம்! இடியை இறக்கும் நிறுவனங்கள்
சென்னை: ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணம் இன்னும் சில நாட்களில் கிடுகிடுவென அதிகரிக்க உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தொலைதொடர்பு துறையின் வருவாய் வளர்ச்சி என்பது மெதுவாக தொடங்கி உள்ளது. செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதம் வரை சரிவை சந்தித்தது. இது டிசம்பர் மாதம் இன்னும் சரியும் என்று கூறப்படுகிறது. இதனால் ரீசார்ஜ் கட்டணத்தை தொலைதொடர்பு நிறுவனங்கள் உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு இந்த மாதம் அல்ல 2026 புத்தாண்டு வாரத்தில் அமலுக்கு வரும் வகையில் தொலைதொடர்பு நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிடலாம் என்று சொல்லப்படுகிறது.
தற்போது வரை இதுதொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாக வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ஆண்டு பிளானுக்கான கட்டணத்தை உயர்த்தியது. கடந்த நவம்பரில் 12 சதவீதம் வரை உயர்த்தி கட்டணத்தை ரூ.1,999 ஆக நிர்ணயம் செய்தது. அதேபோல் 84 நாளுக்கான பிளான் திட்டத்தை 7 சதவீதம் வரை உயர்த்தியது.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்தபட்ச திட்டமான வாய்ஸ் ஒன்லி பிளான் திட்டத்தை ரூ.10 ஆக உயர்த்தியது. பிஎஸ்என்எல் தனது கட்டணத்தை உயர்த்தால் வேலிடிட்டி நாட்களை குறைத்தது. இப்படியான சூழலில் மீண்டும் ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணம் உயர்வது பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications