Jio recharge hike: குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய ஜியோ.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சென்னை: தகவல் தொடர்பு பயன்பாடு மக்களிடையே அதிகரித்து விட்ட நிலையில் தற்போது அதற்கு ஏற்றபடி கட்டணங்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஜியோ (Jio recharge hike) தொலைத் தொடர்பு நிறுவனம் தற்போது கட்டணத்தை கூட்டியுள்ளது. ஆரம்பத்தில் இலவசமாக கொடுத்த ஜியோ நிறுவனம் தற்போது கட்டணங்களை அதிகரித்துள்ளது பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தற்போதைய 2 கே கிட்ஸ்கள் கையில் ஆறாம் விரலாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. அந்த அளவுக்கு தகவல் தொடர்பு பயன்பாடு அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் 80, 90ஸ் கிட்ஸ்கள் எல்லாம் கொஞ்ச நேரம் இண்டெர்நெட் பயன்படுத்துவதற்கு நெட் சென்டரை தேடி அலைந்த காலம் போய், இப்போது எல்லாரது செல்போன்களிலும் இண்டெர்நெட் சேவையை நினைத்த நேரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு மாறிவிட்டது.

ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்த ஜியோ
இதில் ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பத்தில் சிம் வாங்குபவர்களுக்கு இலவசமாக இண்டெர்நெட் மற்றும் அன்லிமிட்டெடு கால் ஆஃபரை கொடுத்து மற்ற நெட்வொர்க்குகளில் இருந்த பயனர்களையும் தன் பக்கம் இழுத்தது. ஒரு நாளைக்கு 1 ஜிபி இண்டெர்நெட் இலவச வசதியையும், அன்லிமிட்டெடு கால் ஃப்ரீ வசதியையும் கொடுத்தது. நாட்கள் செல்ல செல்ல.. இண்டெர்நெட் பேக், கால் அன்லிமிட்டெடு பேக் என அனைத்திற்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டு விட்டது.
இதன் பிறகு ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்துக்கொண்டே செல்றன. இதில் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள ஜியோ நிறுவன சேவையினை, இந்தியாவில் பல கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். துவக்கத்தில் மலிவு விலையில் ரிசார்ஜ் கட்டணங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்த ஜியோ நிறுவனம் பிறகு கட்டணங்களை படிப்படியாக உயர்த்த ஆரம்பித்துள்ளது.
ரூ.299 ஆக உயர்வு
இந்த நிலையில்தான் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஜியோ நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணமாக இருந்த ரூ. 249 கட்டணத்தை ரூ. 299 ஆக உயர்த்தியுள்ளது. ரூ.299 ரீசார்ஜ் செய்தால் தினமும் 1.5 ஜிபி இண்டெர்நெட் மற்றும் வரம்பற்ற கால்கள் பெறும் சேவை தற்போது ஜியோ நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது.
எனினும் அழைப்புகளுக்காக மட்டும் மேற்கொள்ளப்படும் ரூ.189 (மொத்தம் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 300 எஸ்.எம்.எஸ்கள்) 28 நாட்களுக்கு வழங்கப்படும் சேவையை ஜியோ நிறுவனம் தொடர்ந்து வழங்குகிறது. 249 ரூபாய்க்கு ஒரு ஜிபி டேடா வசதியுடன் அளிக்கப்பட்டு வந்த இந்த பிளான் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டண உயர்வுடன் அது அமல்படுத்தப்படுமா? இல்லையா என்பது பற்றி தெரியவில்லை.
ஜியோவின் சமீபத்திய கட்டண உயர்வு
ரிலையன்ஸ் ஜியோவின் கட்டண உயர்வு பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது, ரூ. 209 திட்டம் (22 நாட்கள்) இப்போது இல்லை. முன்பு இத்திட்டங்கள் ரூ. 160 முதல் ரூ. 170 வரை இருந்தன. கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர், முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தின. அவை தங்கள் கட்டணங்களை 25% வரை கூட்டின.
தற்போது, 22 நாட்கள் திட்டம் ரூ. 239 ஆக உள்ளது. இது முன்பு ரூ. 209 ஆக இருந்தது. சுமார் 15% அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. 28 நாட்கள் திட்டம் ரூ. 299 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இது ரூ. 249 ஆக இருந்தது. இது சுமார் 20% உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications