ஜான் பாண்டியன் புட்டு புட்டு வச்சிட்டாரே.. இதெல்லாம் திமுக வேலை.. ஞாபகம் இருக்கா "வைகோ அணி".. டிட்டோ
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி விரைவில் இணையும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி முடிவை, கூட்டணியிலுள்ள மற்ற தலைவர்களால் ஏற்க முடியவில்லை.. வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பாஜக மேலிடத்துடன் "சமரசம்" பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், கூட்டணி கட்சிகளும் இதே முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

வாசன் முயற்சி: கிருஷ்ணசாமி, வாசன், போன்றோரும், கூட்டணி முறிவை ஏற்கவில்லையாம்.. அதனால், விரைவில் விரிசலை தளர்த்தி, இரு கட்சிகளையும் இணைக்க முற்படுவார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
அந்தவகையில், ஜான்பாண்டியனும் இதே முயற்சியை மேற்கொள்வார் என்கிறார்கள். ஒரு சேனலுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் சொல்லி உள்ளதாவது:
"இந்த முடிவானது வருத்தத்துக்குரிய விஷயம்தான்.. ஆனால், இது உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்படுமா? அல்லது இன்றுடன் நின்றுவிடுமா என்பது தேர்தல் காலக்கட்டத்தில்தான் முடிவெடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஜேபி நட்டா: ஏனென்றால் இது குறித்து பாஜக என்ன சொல்லபோகிறது? ஜேபி நட்டா என்ன சொல்கிறார்? என்றெல்லாம் தெரியவில்லை.. "என்னுடைய சொந்த கருத்துக்களாக எடுத்து கொள்ள வேண்டுமே தவிர, இதனை பாஜகவின் கருத்துக்களாக எடுத்து கொள்ள கூடாது என்று பலமுறை அண்ணாமலை சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, இந்த விஷயத்தை பார்ப்பதில் வேறு வேறு கருத்துக்கள் உள்ளன.. அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து.
அதேபோல, பாஜகவில் யாரையுமே விமர்சிக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி உள்ளார். இப்படி அவர் சொல்கிறார் என்றாலே ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால்தான், அதிமுக - பாஜக இணைய வாய்ப்பு இருப்பதாக நம்புகிறோம்..
ஐயப்பாடு: பாஜகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்துவிட்டால், அமோக வெற்றியை பெற்றுவிடுவார்கள் என்பதால், கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக செய்த சதியாக இது இருக்குமோ என்ற ஐயப்பாடு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகம் எங்களுக்கும் உள்ளது.
ஏனென்றால், அன்று, அண்ணன் வைகோ வைத்து, அணியை உருவாக்கி, அதிமுகவை வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதா.. அதுபோலவே, பாஜக + அதிமுக இணைந்துவிட்டால், அமோக வெற்றி பெற்றுவிடும் என்று திமுக நினைக்கிறது.
எப்படி பார்த்தாலும், இந்த கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவா? பாஜகவா? என்று பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி நாங்கள் முடிவெடுப்போம்.. தேவேந்திர குல வேளாளர் தொடர்பான கோரிக்கைகளை, எங்களுக்கு, பாஜக மட்டுமே நிறைவேற்றி தந்தது என்று சொல்ல முடியாது. அதிமுகவுக்கும் இதில் பங்கு உள்ளது.. அண்ணன் எடப்பாடியின் பங்கு நிறையவே உள்ளது.. எனவே, அதிமுக - பாஜக இருவருமே இணைந்துதான் எங்களுக்கு அரசாணையை பெற்று தந்தார்கள்.
3வது யாருடன்: 3வது அணி என்று இப்போதே ஏன் பேச வேண்டும்? முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும்.. யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள் என்பதை அறிவிக்கட்டும்.. 3வது அணி என்பதைவிட, 2வது அணியே இருக்கட்டுமே.. நல்லதே நடக்கும் என்று நினைப்போமே.. அப்படியும் 3வது அணி அமைந்துவிட்டால், செயற்குழுவை கூட்டி முடிவெடுப்போம். அதிமுகவில் இருப்பதா? பாஜகவுடன் இணைவதா? என்று அதற்கு பிறகு முடிவெடுப்போம்" என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications