"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது உனக்கேன் கிஸ்தி".. கேரள விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஜோதிமணி கேள்வி
சென்னை: இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத்தான் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு இல்லையா? என கரூர் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.பி. ஜோதிமணி, மோடியின் நண்பர்கள் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்தபின் நாட்டை விட்டு பத்திரமாக அனுப்பிவைக்கப்படுவார்கள்.ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை திருப்பிக் கேட்கும் ஒன்றிய அரசு! இப்படியொரு மோசமான, இரக்கமற்ற அரசை இந்தியா கண்டதில்லை.
இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத் தான் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு இல்லையா? பிறகெதற்கு வரியென்ற பெயரில் கொள்ளை அடிக்கிறது மோடி அரசு? வரியையும்,மக்களையும் மாநில அரசே பார்த்துக்கொள்ளலாமே.

வரி
வரி என்ற பெயரில் கொள்ளை அடித்துவிட்டு, மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் கொடுக்காமல் வயிற்றில். அடிக்கும் மோடி அரசை நினைத்தால் " வானம் பொழிகிறது,பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்கவேண்டும் கிஸ்தி ..." எனும் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் தான் நினைவுக்கு வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

இயற்கைச் சீற்றங்கள்
இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத் தான் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு இல்லையா? பிறகெதற்கு வரியென்ற பெயரில் கொள்ளை அடிக்கிறது மோடி அரசு? வரியையும், மக்களையும் மாநில அரசே பார்த்துக்கொள்ளலாமே. இவ்வாறு கரூர் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளா 2018 பெருவெள்ளம்
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிட்டதட்ட 100 ஆண்டுகளில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளில் 2018 இல் நடந்தது மோசமானதாகும். இந்த வெள்ளப்பெருக்கின் போது 373 பேர் இறந்தனர். பலர் தங்கள் உடைமைகளையும் வீடுகளையும் இழந்தனர்.

42 அணைகளில் 35 அணைகள்
இந்த மாநிலத்தில் உள்ள 42 அணைகளில் 35 அணைகள் வரலாற்றில் முதல் முறையாக திறக்கப்பட்டன. வயநாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. அது போல் எர்ணாக்குளம், இடுக்கி, காசர்கோடு, கோழிக்கோடு, கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, பாலக்காடு, பத்தனம்திட்டா, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடவுளின் தேசம் கண்ணீர் தேசமாக காட்சியளித்தது.

வெள்ள பாதிப்பு
இந்த நிலையில் 2018- 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது நிவாரணமாக வழங்கிய அரிசிக்கான நிதியை வழங்க கேரளத்துக்கு ஒன்றிய அரசு கெடு விதித்துள்ளது. கேரள அரசு உடனடியாக நிதியை வழங்காவிட்டால் பேரிடர் மீட்பு நிவாரணத்துக்கான நிதி குறைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கெடு விதித்ததை அடுத்து உடனடியாக நிதியை விடுவிக்க முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரள அரசு
இதுகுறித்து கேரள அரசு வட்டாரங்கள் கூறுகையில் இந்த பணத்தை திருப்பி தருமாறு மத்திய அரது ஓராண்டுக்கு மேலாக கேட்டு வருகிறது. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாநிலத்திற்கு மத்திய அரசின் நெருக்கடி மாநில வளர்ச்சிக்கு மேலும் பின்னடைவை தரும். இதில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு ஒரு தீர்வு காணவேண்டும் என தெரிவித்துள்ளன. அதே ஆண்டு வெள்ள பாதிப்பின்போது ஹெலிகாப்டர் மூலம் நடந்த மீட்புபணிகளுக்கும் மத்திய அரசு பணம் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications