Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் இவர்தான்! ராமர் கோயில் அரசியல்.. ஆருடம் கணித்த பத்திரிகையாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை அரசியல் ஆதாரத்திற்காக பாஜக பயன்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இதன் பின்னால் இருக்கும் அரசியல் குறித்து பத்திரிகையாளர் பா.கிருஷ்ணன் விளக்கியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் நாட்கள்தான் இருக்கிறது. எனவே இந்த முறை மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. தற்போதைய பிரதமரான நரேந்திர மோடியே, எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்றால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் எனும் வரலாற்று சாதனைக்கு மோடி சொந்தக்காரராவார்.

Journalist Pa Krishnans explanation of BJPs politics behind the opening of the Ram temple

அதேபோல ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா 2025ம் ஆண்டில் கொண்டாடப்படுகிறது. இப்போது மத்தியில் பாஜக இருந்தாலும், சில மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிகளை நடத்துவதில் தொடர் சிக்கல் இருந்து வருகிறது. இந்த சூழலில் நூற்றாண்டு விழா கொண்டாடும் சமயத்தில் பாஜக ஆட்சியில் இல்லாமல் போனால், அது ஆர்எஸ்எஸ்ஸை வலுவிழக்க செய்துவிடும். எனவே 2024 நாடாளுமன்ற தேர்தல் பாஜவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இதற்கிடையில், ராமர் கோயில் திறப்பு விழா பாஜவின் அரசியல் மைலேஜை மேலும் உயர்த்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன் பின்னால் இருக்கும் அரசியல் குறித்து ஒன்இந்தியா யூடியூப் தளத்திற்கு பத்திரிகையாளர் பா.கி பேட்டியளித்திருக்கிறார். அவர் கூறியதாவது,

"ராமர் கோயில் விவகாரத்தில் பாஜகவுக்கு ஏராளமான பலன்கள் இருக்கின்றன. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் மக்களவை தொகுதிகள். உ.பியில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன. இந்தியாவில் அதிக எம்பி தொகுதிகள் கொண்ட மாநிலம் இதுதான். இதனை முழுமையாக எடுத்துக்கொள்ள ராமர் கோயில் விவகாரம் பயன்படும். ராமர் கோயில் எதிர்பார்த்த மாதிரி பாஜகவுக்கு தேர்தல் களத்தில் கை கொடுத்தது எனில், அவர்கள் இந்துக்களின் வாக்கு வங்கிகளை மேலும் அதிகமாக கவர கவனம் செலுத்துவார்கள்.

மற்றொரு புறம் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி வாக்குகளை பெறுவார்கள். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, ராமர் கோயில், பொது சிவில் சட்டம். இது மூன்றும் பாஜவின் முக்கிய வாக்குறுதிகள். எனவே இதில் இரண்டை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லி வாக்குகளை சேகரிப்பார்கள்.

ஒருவேளை இது எதிர்பார்க்காத அளவு கைகொடுக்கவில்லை எனில், பாஜகவினர் அயோத்தியில் மசூதி கட்டுவதற்கும் களம் இறங்குவார்கள். அதாவது, உ.பியில் இஸ்லாமியர்களும் கணிசமான அளவுக்கு இருக்கின்றனர். எனவே, தற்போது கையில் எடுத்துள்ள ராமர் கோயில் யுக்தி பேக்ஃபயர் ஆவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே தங்களை மதச்சார்பற்றவர்களாக காட்டிக்கொள்ள மசூதி கட்டுவதில் இறங்கவும் பாஜகவினர் தயங்கமாட்டார்கள்.

இது எல்லாம் வெளி அரசியல். ஆனால், ராமர் கோயில் விவகாரத்தில் உள் அரசியலும் கொஞ்சம் இருக்கிறது. அதாவது, பாஜகவை பொறுத்த அளவில் 75 வயது ஆகிவிட்டால் அவர்களை தலைமை பொறுப்பிலிருந்து விடுவித்துவிடுவார்கள். நாளை நரேந்திர மோடிக்கும் இதே நிலைமை வரலாம். எனவே அடுத்த பிரதமர் யார்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த லிஸ்ட்டில் 3 பேரின் பெயர்கள் அடிப்பட்டிருந்தன.

நிதின் கட்கரி, அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் என்பதுதான் இந்த பெயர்கள். இதில் சிஏஜி அறிக்கை மூலம் நிதின் கட்கரியை பாஜக ஓரம்கட்டிவிட்டது. இப்போது ரேசில் அமித்ஷாவும், யோகியும் மட்டுமே இருக்கின்றனர். இதில் அமித்ஷா சக்தி வாய்ந்த தலைவராக இருந்தாலும், ஆர்எஸ்எஸ் ஒரு கணக்கு வைத்திருக்கும். அதன்படி யோகிக்குதான் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

காரணம் உ.பி லாபிதான். குஜராத் மாடலை முன்னிறுத்தி எப்படி மோடியை கொண்டு வந்தார்களோ, அதேபோல உ.பி மாடலை முன்னிறுத்தி யோகியை கொண்டுவர திட்டம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+