இதுதான் தவெகவின் பூத் கமிட்டி வலிமை.. அதிமுக நிர்வாகி சொன்ன வார்த்தை.. பத்திரிகையாளரின் பதிவு!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்துள்ளது. திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக என்று 4 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், வாக்காளர்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டனர். மொத்தமாக 5.73 கோடி வாக்காளர்கள் வாக்கு அளிக்க தகுதி பெற்றிருந்தனர். அதில் 4.88 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இதன்படி தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவிகிதம் 85.15ஆக இருக்கிறது. இந்த தேர்தலில் தவெகவின் செயல்பாடுகள் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சியினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் பூத் கமிட்டி முறையாக அமைக்கப்பட்டிருந்தாலும், தவெகவின் கட்டமைப்பு இந்த தேர்தலில் தெரிய வரும் என்று பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தவெக போட்டியிட்ட 233 தொகுதிகளில் பூத் கமிட்டி சரியாக அமைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் பூத் கமிட்டியில் இளைஞர்கள் மற்றும் பெண்களும் இடம்பெற்றிருந்தனர். இதுதொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் எழுதியுள்ள பதிவு சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அத்துடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
அதில், மொத்தமாக 175 பூத்களை பார்வையிட்டுள்ளேன். அந்த அனைத்து பூத்களிலும் தவெக பூத் ஏஜெண்ட்டுகள் இடம்பெற்றிருந்தனர். காலை 5.45 மணிக்கு Mock போலிங் நடைபெற்றது. அதில் உற்சாகத்துடன் பங்கேற்ற தவெகவினர், ஃபார்ம் 17ஐ பெற்றுக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு 25 வயதிற்கு மேல் இல்லை. இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் பெண்கள் அதிகளவில் இருந்தனர்.
தவெக பூத் ஏஜெண்ட்டாக இருந்த இளைஞர்கள் விஜய்யின் ட்ரஸ் கோடில் இருந்தனர். ஒரு மாதிரி நாங்கள் தவெககாரர்கள் தான் என்பதை அறிவிக்கும் வகையில் இருந்தனர். எளிதாக கண்டறிய கூடிய வகையில் இருந்தனர். பூத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்பாக செயல்பட்டனர். மாலை 6 மணி வரை எங்கும் நகரவில்லை. 70, 80, 90களில் எப்படி திராவிடக் கட்சிகள் இருந்தார்களோ, அப்படிதான் செயல்பட்டனர்.
தவெகவின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். நிச்சயமாக தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் அந்த தாக்கம் திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளில், யாருக்கு எதிராக திரும்பும் என்பதை கணிக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார். இது தவெகவினர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன்












Click it and Unblock the Notifications