நாட்டின் நலனா? ஒரு குடும்பத்தின் நலனா? அன்புமணியை நோக்கிப் பாய்ந்த அம்பு!
சென்னை: ஒரு குடும்பத்தின் நலன் கருதியே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ் எனக் கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.
கடந்த சில வாரங்களாகவே இழு இழுவென்று இழுத்துக் கொண்டிருந்த பாமக, தனது கூட்டணியை இன்று காலை அவசர அவசரமாக அறிவித்துள்ளது.

காலை 7 மணிக்கே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டவர்கள் மருத்துவர் ராமதாசையும் அன்புமணியையும் நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளனர்.
நேற்று பாமக கூட்டணி தொடர்பாகச் சேலம் மேற்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
ஆகவே, கிட்டத்தட்ட அதிமுக- பாமக கூட்டணி உறுதி என்றே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்தக் கணிப்புகளை எல்லாம் சல்லி சல்லியாக உடைத்து எறிந்துவிட்டு, இன்று பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. அதன்பின்னர் சில மாதத்திற்கு முன்னதாக பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
ஆனால், அதே கூட்டணியிலிருந்த பாமக இதுவரை பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மெளனம் காத்து வந்தது. இதனால் ஒரு குழப்பம் நீடித்தது.

ஒரு பக்கம் அதிமுகவுடனும் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்த பாமக இன்னொரு பக்கம் பாஜக தேசிய தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.
குறிப்பாக அமித்ஷாவுடன் அன்புமணி நேரடியாகத் தொலைப்பேசி மூலம் தொடர்பிலிருந்து வந்தார் என்று டெல்லி ஊடக வட்டாரங்களில் செய்தி கசிந்து வந்தது.

ஆகவே, பாமக மீது ஊடக விவாதங்களில் மிகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன. அந்த விமர்சனங்களைப் பற்றி அன்புமணி ராமதாஸ், 'எங்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள்' என்று சமீபத்தில் கூட கருத்து தெரிவித்திருந்தார்.
இன்று காலை பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த பிறகு பேசிய அன்புமணி, "நாட்டின் நலம் கருதி பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 'மோடியின் நல்லாட்சி தொடரவும் தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் பாமக இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த முடிவுக்கு 60 ஆண்டுகாலமாகத் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான சூழல் உருவாகி உள்ளது. மக்களிடம் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்வதற்காகத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டின் நலம் கருதி எடுத்த முடிவு என்று அன்புமணி சொல்கிறார். ஆனால், இது ஒரு குடும்பத்தில் நலன் கருதி எடுத்த முடிவு என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், "பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது அந்தக் கட்சிக்கு நன்மையா? அல்லது கெட்டதா ? என்பது எல்லாம் பேச்சே கிடையாது.

இந்த முடிவு பாமக நலன் சார்ந்து எடுக்கப்பட்டதல்ல; ஒரு குடும்பத்தின் நலன் சாந்து எடுக்கப்பட்ட முடிவு என்றே எனக்குத் தோன்றுகிறது.
அன்புமணி சிறைக்குப் போக வேண்டுமா? அல்லது இல்லையா? என்ற யோசனையை மட்டும் பிரதானமாக வைத்து மருத்துவர் ராமதாஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 1 மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்று தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. அதில் அன்புமணி வசமாகச் சிக்கி உள்ளார். அதை அனைவரும் அறிவார்கள்.

அதை மனதில் வைத்துத்தான் மருத்துவர் ராமதாஸ் பாஜகவுடனான கூட்டணியை மீண்டு உறுதி செய்துள்ளார்.
எப்படி உபியில் மாயாவதி, பாஜக பக்கம் ஒதுங்கி நிற்கிறார்களோ அதைப்போலத்தான் பாமகவும் பாஜக பக்கம் ஒதுங்கி நிற்கிறது. ஏனென்றால் மாயவதி மீது வழக்கு உள்ளது. அதற்காக அவர் பாஜக பக்கம் நிற்கிறார் என்பதை அனைவரும் அறிவார்கள்.
அன்பு மணிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு வேகம் எடுத்தால், அவர் சிறைக்குச் செல்வதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்தக் கட்சி மட்டுமல்ல; தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அந்தக் கணக்குத் தெளிவாகப் புரிந்துவிடும்.

ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் இவர்களுக்குப் பின்னால் எத்தனை வழக்குகள் உள்ளன என்று கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.
மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தில் எண்ணம் என்னவென்றால், வன்னியர்கள் அனைவரும் தங்களின் வாக்கு வங்கி என நினைக்கிறது. வன்னியர்கள் ஓட்டு எங்கள் ஓட்டு. வன்னியர்கள் நாங்கள் என்ன சொல்கிறோமோ அந்தக் கூட்டணிக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்று நம்புகிறது இந்தக் குடும்பம்.

இந்தக் குடும்பம் இப்படியே நம்பிக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்திற்கு மேல் வன்னியர்கள் வேறு ஒரு கூட்டணியை ஆதரிக்கத் தொடங்கி விடுவார்கள் என்று நம்புகிறேன்.
குறிப்பாக வேல்முருகன் போன்ற தலைவர்களுடன் சேர்ந்து எதிர்காலத்தில் வன்னியர்கள் பயணிக்கத் தொடங்கி விடுவார்கள்.
அப்படியான ஒரு சூழ்நிலையைத்தான் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உருவாக்கி வருகிறார்" என்கிறார்
-
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்!












Click it and Unblock the Notifications