அமைச்சர்கள் வழக்கை விசாரித்த ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்!
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். திமுக அமைச்சர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் தொடர்புடைய வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் போர்ட்ஃபோலியோ வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, எம்.எல்.ஏக்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை தோண்டி எடுத்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து வந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஏற்கனவே கீழமை நீதிமன்றங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். அதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்தார் ஆனந்த் வெங்கடேஷ்.
இந்த வழக்குகளின் விசாரணையின்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "சொத்துக்குவிப்பு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை எல்லோரும் வில்லனாக பார்க்கின்றனர்." என கருத்து தெரிவித்திருந்தார். அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இந்த வழக்குகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் விசாரணைக்கு மீண்டும் வரவிருக்கின்றன.
இந்நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அக்டோபர் 3 முதல் 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதத்துக்கு ஒருமுறை உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். அந்தவகையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் தாக்கலான கனிமம், நில சீர்த்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல், சுதந்திர போராட்ட தியாகிகள் தொடர்பான ரிட் மனுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இனி அடுத்த மூன்று மாதங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார். ஏற்கனவே, தங்கள் வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், தான் விலகமாட்டேன் என உறுதியாக கூறினார் ஆனந்த் வெங்கடேஷ். இந்நிலையில், வழக்கமான நடைமுறைப்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாற்றப்பட்டுள்ளார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications