அதிமுக கொடியை ஓபிஎஸ் யூஸ் செய்தாருன்னு வைங்க! எடப்பாடிக்கு நீதிபதி கூறிய அறிவுரை
சென்னை: அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வம் தரப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வம் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பி.எஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக இன்று மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது, இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நிலை என்ன? என நீதிபதி சதீஷ்குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஒ.பன்னீர் செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் P.H.அரவிந்த் பாண்டியன், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்திவைக்கலாம் எனவும் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாரயண், தீர்ப்பு வரவில்லை என்றால், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாமே என தெரிவித்தார். தள்ளிவைப்பதாக இருந்தால் பன்னீர் செல்வத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என்றார்.
இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தடை உத்தரவை பின்பற்றி வருவதாகவும், மீறப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தடை உத்தரவை நீட்டிக்க மறுத்து, விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, தடை உத்தரவை மீறக் கூடாது என அறிவுறுத்தினார். தடை உத்தரவை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரும்படி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவுறுத்தினார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!











Click it and Unblock the Notifications