ஜெயலலிதாவின் 'கறுப்புபூனை' படை அதிகாரிகள் எங்கே போனார்கள்? ஆறுமுகசாமி கமிஷனில் பதில் சொன்ன சசிகலா
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே போனார்கள் என்பது குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா கூறியதாவது: ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற மொத்த கால கட்டத்தில் அந்த அறை வாசல், அந்த தளத்தில் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் பெருமாள்சாமி, வீரப் பெருமாள், ராஜா மற்றும் அவர்களின் கீழ் தனி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் 24 மணிநேரமும் ஷிப்ட் படி கண்காணிப்பு பணியில் இருந்தனர்.
பாதுகாப்பு குறித்து காவல்துறை இயக்குநர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் போன்றவர்கள் மற்றும் பிற காவல்துறை உயர் அதிகாரிகள் அவ்வப்போது வருவார்கள். மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் ஜெயலலிதாவின் மொபைல் டிரான்ஸ்போர்ட் செக்யூரிட்டிக்கு மட்டுமே வருவார்கள்.

கறுப்பு பூனைப் படையின் பணி
ஜெயலலிதாவின் மொபைல் டிரான்ஸ்போர்ட் செக்யூரிட்டிக்கு மட்டுமே வருவார்கள் என்பதால், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவர்கள் உடன் இருக்கவில்லை. ஏனெனில் ஜெயலலிதாவின் வழிபயண மற்றும் அதன் தொடர்புடைய பாதுகாப்பு பணிக்கு மட்டுமே மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் வருவார்கள். போயஸ் தோட்ட இல்லத்துக்குள் கூட அவர்கள் பாதுகாப்புக்கு வரமாட்டார்கள்.

தலைமை செயலகத்தில்..
அதேபோல தலைமை செயலகத்துக்குள் ஜெயலலிதா வாகனத்தை விட்டு இறங்கிய உடன் அவர்கள் அங்கு வாயிலிலேயே காத்திருப்பார்கள். மத்திய அரசின் பாதுகாப்பு அலுவலர்களுக்கு முன்னதாகவே ஜெயலலிதாவின் ப்ரோகிராம்கள் பற்றி தெரிவிப்பது ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரிகளையே சாரும். இவ்வாறு சசிகலா தமது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

கறுப்பு பூனைப்படை என்பது என்ன?
ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் அவர் தேசிய கமாண்டோ படையால் பாதுகாக்கப்பட்ட நபர். அவருக்கான அடையாளக் குறியீடு Protected Person 27. இதுதான் கறுப்புபூனை படை என அழைக்கவும்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரை அவரது மெய்ப் பாதுகாவலர்களே சுட்டுப் படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்த கறுப்புப் பூனை படை உருவாக்கப்பட்டது. இந்த கறுப்புப் பூனை படை பாதுகாப்பில் பல்வேறு பிரிவுகள் உண்டு. அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது இசட் பிரிவு பாதுகாப்பு.

விடைதெரியாத கேள்விகள்
இத்தகைய கறுப்பு பூனை படையின் பாதுகாப்பு என்பது ஒரு விவிஐபி வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்வரை பாதுகாப்பது. அதனால்தான் ஜெயலலிதா, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது கறுப்பு பூனை படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? அவர்கள் யாரால் பணியில் இருந்து போக சொல்லப்பட்டனர்? என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications