“தமிழகத்தில் சமூகம் சீர்கேட்டை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது” நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஷாக்!
சென்னை: திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்திருந்த உத்தரவுகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன. இப்படி இருக்கையில், தமிழகத்தில் சமூகம் சீர்கேட்டை நோக்கி போய்க்கொண்டிருப்பதை உணர முடிவதாக பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி அவர் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
இது குறித்து அவர் பேசியதாவது, "எல்லா மதத்தை சார்ந்தவர்களும் எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர்களாக இருக்காங்க. சமீபத்துல ஒரு இஸ்லாமிய பெரியவரோட நான் உரையாடிக் கொண்டிருந்தேன்.

கவன சிதறல்
நம்ம எல்லோருக்கும் தெரியும், இஸ்லாத்தில் உருவ வழிபாடு என்பது கிடையாது. நாங்கள் மனம் விட்டு தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்ததால், "சார் நாங்கள் பள்ளிவாசல் போகிறோம் தினமும் தொழுகையை செய்கிறோம் ஆனாலும் கவன சிதறல் ஏற்படுகிறது. மனம் ஒரு முகப்படவில்லை" என்று மனம் விட்டு என்னிடம் கூறியிருந்தார்.
இஸ்லாமியர்களுக்கு தியானம்
மனம் ஒருமுகப்படுவதில்லை என்பது எல்லோருக்கும் இருக்கக் கூடிய பிரச்சினைதான். தியான மையத்தில் தியான மார்க்கம் என்கிற நுட்பம் இருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் உரித்தானது கிடையாது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. தியானத்தின் நுட்பங்களை ஒரு இஸ்லாமியர் உள்வாங்கிக் கொண்டால் அவர் மிகச்சிறந்த முறையில் நமாஸ் செய்ய முடியும் என்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.
இந்த கட்டுரை
நம்முடைய தேசத்திற்கு நமக்கு என ஒரு பாரம்பரியம் இருக்கிறது. நமக்கென அறம் சார்ந்த வாழ்க்கை சரி, தவறு என வாழ்க்கை இருக்கிறது. இன்று இந்து பத்திரிகையில் 2வது பக்கத்தில் முழு பெருசான கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதில் 'ethical naan monogamous relationship' என தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய ஒரு ட்ரெண்டை பற்றிய முழுநீள கட்டுரை வெளியாகி இருந்தது.
தமிழ் சமூகம்
நாம் அனைவரும் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த கட்டுரை இப்போது எல்லாம் அப்படி கிடையாது. கணவன் மனைவி இடையே புரிதல் இருந்தால், சம்மதம் இருந்தால் ஒருவர் பலருடன் இருக்கலாம் என்கிற விஷயத்தை எத்திக்கல் என்கிற வர்ணனையுடன் அந்த கட்டுரையை கொண்டு சென்றிருந்தனர். சமுதாயம் எவ்வளவு சீர்கெட்டை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை இதை வைத்து உணர முடிகிறது.
குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்
நம்முடைய பாரத சமுதாயத்திற்கு அடிப்படை என்பது குடும்பம் தான். இந்த குடும்பத்தில் உறவு, ஒழுக்கம் உள்ளிட்ட எல்லாவற்றையும் காப்பாற்றப்பட வேண்டுமெனில் நிச்சயமாக நாம் தியான முறைகளோடு ஒட்டி வாழ்க்கை முறையை அமைத்திருந்தால், தேச கலாச்சாரம் என்பதை காப்பாற்ற முடியும். எனக்கு முன்னர் பேசியவர்கள் நமக்கென தனியான வாழ்க்கை முறை இருக்கிறது அதை காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அதை அப்படி காப்பாற்ற வேண்டும் எனில் தியான முறையுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
ஏப்ரல் 18 வரை தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications