அன்பழகனுக்கு வழங்கும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இருக்கிறது.. ஸ்டாலின் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உடல், டாக்டர்களின் மருந்துகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் திமுக பொதுச்செயலாளர், க.அன்பழகன் உடல்நலத்தை நேரில் சென்று பார்த்து, மருத்துவர்களிடம் நலம் விசாரித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதன் பிறகு நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

K Anbazhagan health is critical, his body is not responding to the medicine: MK Stalin

கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஓராண்டு காலமாக வயது முதிர்வு காரணமாக தன்னுடைய வீட்டிலேயே ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். இந்தநிலையில் பேராசிரியருக்கு கடந்த 24ம் தேதி உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

மருத்துவர்கள் அவருக்கு உரிய அனைத்து மருத்துவ வசதிகளையும், உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்கள். அவருடைய வயது முதிர்வின் காரணமாக மருத்துவர்கள் வழங்கக்கூடிய சிகிச்சை கூடுமானவரை பலனளிக்காத நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. எனினும் பேராசிரியர் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+