பாஜகவின் ஆபரேஷன் 9! ஜெயிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்! டெபாசிட் கிடைக்குமா.. கே.எஸ்.அழகிரி கிண்டல்
சென்னை: பாஜக போட்டியிடுவதாக கூறப்படும் 9 தொகுதிகளில் ஜெயிப்பது இருக்கட்டும், அவர்கள் டெபாசிட் வாங்குவார்களா என்பதை பார்ப்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கிண்டல் செய்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. அதற்குள் நிறைய வேலைகள் இருக்கிறது. இந்த தேர்தலை பொருத்தவரையில் தமிழக பாஜக மிகவும் தெளிவாக இருக்கிறது.

5 மாநில சட்டசபை தேர்தல் பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்தோம. 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தமிழகத்தில் 9 தொகுதிகள் மீது தனி கவனம் செலுத்த இருக்கிறோம். கட்சியின் கட்டமைப்பை மேலும் வலிமைப்படுத்த இருக்கிறோம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை சொன்ன அந்த 9 தொகுதிகள் என்னென்ன என்பதை பார்ப்போம். இது உத்தேசம்தான்! கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை, வேலூர், கோவை, ஈரோடு, தென் சென்னை , ராமநாதபுரம், நீலகிரி ஆகியவைகளாக இருக்கலாம் என தெரிகிறது.
அது போல் இந்த முறை 9 எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்வது உறுதி என்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருப்பதாவது: இருந்த கூட்டணியையும் முறித்துக் கொண்டுவிட்டு இப்படி நடுத்தெருவில் நிற்கிறோமே என சொந்த கட்சிக்காரர்களே புலம்பி வருகிறார்கள்.
கூட்டணி இருந்தும் பாஜகவால் தமிழகத்தில் தேர்தல்களில் சாதிக்கவே முடியவில்லை. இப்போது தனித்து நின்று 9 தொகுதிகளில் ஜெயிக்க போகிறோம் என கூறுவது நகைச்சுவைதான். ஜெயிப்பது இருக்கட்டும், முதலில் அந்த 9 தொகுதிகளிலாவது டெபாசிட்டை வாங்க முடியுமா என்பதைத்தான் பாஜக யோசிக்க வேண்டும்.
மத்தியில் மோடி மக்களை ஏமாற்றுவது போல் தமிழகத்தில் அண்ணாமலையும் ஏமாற்றுகிறார். ஏதோ பாஜக மலை போல் வளர்ச்சிக் கண்டிருப்பதை போல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆளே இல்லாத கடையில் டீ போடுவது ஏன் என்பதை போல் இல்லாத கட்சிக்கு 9 இடங்கள் என பேசுகிறார்கள். தேர்தல் வரை இப்படி பேசியாவது ஆறுதல் தேடிக் கொள்ளட்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications