ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கே.டி.ராகவனுக்கு பாஜகவில் மீண்டும் பொறுப்பு ? வெடிக்குதா சர்ச்சை?
சென்னை: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய கே.டி.ராகவனுக்கு பாஜக தலைமை மீண்டும் பொறுப்பு வழங்கியிருப்பதாகவும் இது அக்கட்சியில் புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு பாஜகவில் கிடுகிடுவென ஏறுமுகம் கண்டவர் கே.டி.ராகவன். பாஜக சார்பாக டிவி விவாதங்களில் தொடர்ச்சியாக பங்கேற்ற ராகவன், தமிழ்நாடு மாநில தலைவர் பதவிக்கான ரேஸிலும் இடம்பிடித்தார்.

ஆனால் 2021-ம் ஆண்டு கே.டி.ராகவன், சொந்த கட்சியினரே வைத்த பொறி ஒன்றில் சிக்கினார். கே.டி.ராகவன் தொடர்புடைய ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கே.டி.ராகவன் விலகினார். கடந்த 2 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்தும் கே.டி.ராகவன் விலகி இருந்தார்.
கே.டி.ராகவனுக்கு அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது, அவரது வீட்டில் நிகழ்ச்சி நடைபெற்ற போது பாஜக தலைவர்கள் சந்தித்தனர். அதன் பின்னர் பாஜக நிர்வாகிகளை சென்னை புழல் சிறையில் சென்று சந்தித்தார் கேடி ராகவன்.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவில் கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி பொறுப்பாளராக கே.டி.ராகவன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் சேலம் தொகுதிக்கு கேபி ராமலிங்கம், சிதம்பரம் தொகுதிக்கு எஸ்ஜி சூர்யா, தென்காசி தொகுதிக்கு ராதாகிருஷ்ணன், ஈரோடு தொகுதிக்கு வானதி சீனிவாசன், நாமக்கல் தொகுதிக்கு விபி துரைசாமி உள்ளிட்டோரும் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்கின்றன அந்த செய்திகள். இதனிடையே ஆபாச வீடியோவில் சிக்கிய கே.டி.ராகவனுக்கு பாஜகவில் அதுவும் ஒரு லோக்சபா தொகுதி பொறுப்பாளர் பதவி வழங்குவதா? என்கிற அதிருப்தி குரல்கள் இப்போதே வெளிப்படவும் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications