மிஸ்டர் பாரிவேந்தர்! வன்னியர் மக்களிடம் மன்னிப்பு கேட்கனும்! காடுவெட்டி குரு மகள் பாய்ச்சல்!
சென்னை: இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் பிரதமர் மோடிக்கு ஜால்ரா அடிப்பதை விட்டுவிட்டு உழைத்துச் சாப்பிட வேண்டும் என மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருந்தாம்பிகை தெரிவித்துள்ளார்.
வன்னியர் சமுதாய மக்களிடம் பாரிவேந்தர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாரிவேந்தர்
ஐயா திரு. பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் அவர்களே நீங்கள் தற்போது விகடன் இதழுக்கு கொடுத்த பேட்டியில் வன்னியர்களுக்கான 10.5 தனி உள் இட ஒதுக்கீட்டைப் பற்றிய கருத்தை கூறும் பொழுது நீதிமன்றம் சரியாகத்தான் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உள்ளது என்று கூறி உள்ளீர்கள். இதோடு நீங்கள் உங்கள் கருத்தை தெரிவித்து இருந்தால் இது உங்களின் கருத்து சுதந்திரம். ஆனால் வன்னியர் குல சத்திரியர்கள் மீது வன்மத்தை கக்கும் விதமாக கை கால்கள் நன்றாகத்தான் உள்ளது வன்னியர்கள் உழைத்து சாப்பிட வேண்டியதுதானே என்று கூறுகிறீர்கள்.

வன்னியர் இட ஒதுக்கீடு
உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்தபோது நீங்கள் கோமாவில் இருந்தீர்களா? அப்பொழுது நீங்கள் ஏன் உயர்சாதியினர் இட ஒதுக்கீடு பற்றி எந்த கருத்தும் கூறவில்லை.
நான் கூறுகிறேன் நீங்கள் ஏன் கருத்து கூறவில்லை என்று நீங்கள் எஸ்.ஆர்.எம் பல்கலை கல்வி குழுமம் என்ற ஒன்றை ஏற்படுத்தி உள்ளீர்கள் அந்தப் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய பொழுது பல ஏக்கர் நிலங்களை அபகரித்து உள்ளீர்கள் உங்கள் கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் தற்கொலைகள் நடக்கின்றன நிறைய வரி ஏய்ப்பு செய்து உள்ளீர்கள்.
இதனால் உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு இப்பிரச்சினையில் கருத்து கூறினால் நமக்கு பிரச்சினை வருமோ என்று கருதி கருத்து
கூறவில்லை.

வரி ஏய்ப்பு
உங்களுக்கு வன்னியர்கள் தலைவர்களில் யாரோ ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அந்த தனிப்பட்ட நபர்களின் மீது மட்டும் விமர்சனத்தை வைக்க வேண்டும். ஆனால் ஒட்டுமொத்த மூன்று கோடி வன்னியர்களை இழிவு செய்வது ஏற்புடையது அல்ல.

ஜால்ரா போடாதீர்
ஐயா திரு. பாரிவேந்தர் அவர்களே உங்களுடைய தகுதி என்னவென்று நான் கூறவா நீங்கள் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுவிட்டு தற்பொழுது உங்களின் சுயநலத்திற்காக மோடி அவர்களை புகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஐயா நீங்கள் தான் முதலில் உண்மையாக உழைத்து சாப்பிட வேண்டும் மோடி அவர்களுக்கு ஜால்ரா அடிப்பதை விட்டுவிட்டு.
மேலும் ஐயா திரு. பாரிவேந்தர் அவர்களே வன்னியர்கள் மீது நீங்கள் கக்கிய வன்மத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications