கலைஞரின் கனவு இல்லம்.. வீடு இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதம்.. தங்கம் தென்னரசு அடித்த சிக்சர்
சென்னை: கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் நிதி பெற்று பயனாளிகளே வீடுகளை கட்டிக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்ய தொடங்கினார். இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சூப்பர் திட்டத்தை அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், வீடு இல்லாதவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித்தரும் திட்டம் கலைஞர் அவர்களால் 1975ல் அறிமுகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளை குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின் படி, கிராமப்பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் : குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கி கொள்ளும் குறிப்பிடத்தக்க அம்சங்களை தாங்கி புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்." இவ்வாறு வீடுகள் குறித்து தங்கம் தென்னரசு கூறினார்.
இன்று பட்ஜெட் அறிவிப்பின் நிறைவாக வரும் நிதி ஆண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய், வரியல்லாத வருவாய், தமிழகத்தின் கடன் நிலை, வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பற்றிய தகவல்களையும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிக்க உள்ளார்.
பட்ஜெட் அறிவிப்பிற்கு பின்னர் நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு செய்தியாளர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 4-வது முறையாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். வேளாண் பட்ஜெட்டில் தமிழக விவசாயிகளுக்கு இந்த முறை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அதன்பின்னர் சட்டசபையில் அதாவது வரும் புதன்கிழமை அன்று பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச உள்ளார்கள். அதன்பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, 22-ந் தேதி (வியாழக்கிழமை) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச உள்ளார்கள். அத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications