காலையிலயே பாஜகவை பதறவிட்ட குஷ்பு.. "அரசியல் பள்ளியின் முதல் நாள்".. அதிரும் தாமரை.. கவனிக்கும் திமுக
சென்னை: இன்று செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி, பலரும் தங்களுக்கு பிடித்த ஆசிரியர் போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள். அந்தவகையில், குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட், பாஜகவில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
நாடு முழுக்க இன்று ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் என்று பலரும், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், பாஜகவின் முக்கிய பிரமுகரான, நடிகை குஷ்பு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.. இந்த ட்வீட்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

ட்வீட்: அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று, தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியுடன் இருக்கும் போட்டோவை குஷ்பு ஷேர் செய்துள்ளார்.. கலைஞர் நாற்காலியில் உட்கார்ந்திருக்க, அவருக்கு பின்னால் குஷ்பு நின்று கொண்டிருக்கும் போட்டோவை பதிவிட்டு, "என்னுடைய அரசியல் பள்ளியின் முதல் நாள்.. எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியருடன்... நினைவுகளை அசைப்போடுகிறேன்" என்று பதிவிட்டு ஆசிரியர் தின வாழ்த்துக்களை சொல்லி உள்ளார் குஷ்பு.
ஏற்கனவே, கடந்த 2021ம் ஆண்டு, ஆசிரியர் தினத்தன்றும், கலைஞரை குறிப்பிட்டே, தன்னுடைய ஆசிரியர் தினத்தை உருக்கமாக குஷ்பு பதிந்திருந்தார்.. "மிக முக்கியமாக நாள்.. என்னுடைய வழிகாட்டி மற்றும் சிறந்த ஆசிரியராக திகழ்ந்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்தான் அரசியல் என்பது வெறுப்பு மற்றும் விரக்தி கிடையாது. அது நம்பிக்கை மற்றும் சேவை சார்ந்தது என்று சொல்லிக் கொடுத்தது" என்று நன்றியுடன் ட்வீட் செய்திருந்தார்.
கருணாநிதி: இப்படி ஒவ்வொரு ஆசிரியர் தினத்தன்றும் கருணாநிதியை நினைவுகூர்ந்து குஷ்பு பதிவிடும் ட்வீட்கள் பொதுமக்களின் கவனத்தை திருப்பி வருவதுடன், பாஜக தரப்புக்கு அதிர்ச்சியையும் தந்து வருகிறது. இன்றைய தினம் என்றில்லாமல், எந்த மேடையிலும் கருணாநிதியை விட்டுக்கொடுக்காமல் பேசிவருபவர் குஷ்பு..
திமுகவை கடுமையாக விமர்சிக்கும் அதே சமயம், கலைஞரை மட்டும் விமர்சிப்பது கிடையாது. நேற்றுகூட, உதயநிதியின் சனாதன பேச்சுக்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தார் குஷ்பு..

பூஜை குங்குமம்: "சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்வியல் முறை. இது அனைவரையும் உள்ளடக்கியதே ஆனால் பிளவுபடுத்துவது என திமுக உருவாக்க முயற்சிக்கிறது. அவர்களை பொறுத்தவரை, அவர்கள் வீட்டு பெண்கள் கோயில்களுக்கு சென்று பூஜை செய்து குங்குமம் மற்றும் விபூதி உடன் உலாவரும்போது அது பரவாயில்லை. ஆனால் சனாதன தர்மத்தை பெண்கள் நம்புவதையோ, பழகுவதையோ தடுத்து நிறுத்தும் தைரியம் இவர்களுக்கு இருக்கிறதா" என்று கேள்வி எழுப்பியிருந்தார் குஷ்பு.
ஆனால், இன்றைய தினம், மறைந்த தலைவர் கருணாநிதியை, ஆசிரியர் ஸ்தானத்தில் வைத்து போற்றியுள்ளது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பரபரப்பு: அதுமட்டுமல்ல, கடந்த 2 நாட்களாகவே பாஜக கூடாரமே தேசிய அளவில் கொந்தளித்து காணப்படும் நிலையில், உதயநிதி மீது போலீசில் புகார் வரை சென்றுள்ள நிலையில், பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் என ஒட்டுமொத்த பேரும் திமுகவையும், உதயநிதியையும் கடுமையாக விமர்சித்து வரும்நிலையில், குஷ்பு பதிவிட்டுள்ள இந்த ட்வீட், அரசியல் களத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
-
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications