விரிவடைந்தது மகளிர் உரிமை திட்டம்.. ஓயாத அறிவிப்புகள்.. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓய்ந்த சட்டசபை
சென்னை: 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அதனை வழங்குவது தொடர்பான அறிவிப்பு உட்பட ஏராளமான அறிவிப்புகள், வெளியிடப்பட்ட நிலையில், காலவரையின்றி தமிழக சட்டசபை வைக்கப்பட்டது.
கடந்த 22-ந்தேதியில் இருந்து தினமும் சட்டசபை நடந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால்தான் சட்டசபை காலை-மாலையில் நடத்தப்பட்டு வந்தது.. தினமும் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, மதியம் 1.30 சட்டசபை மணிக்கு முடிக்கப்படும். பிறகு மாலை 5 மணிக்கு சபை சபை தொடங்கப்பட்டு இரவு 8 மணி வரை நடத்தப்பட்டு வந்தது.

ஆனால், 29-ந்தேதி (இன்று) காலையில் மட்டும் சட்டசபை நடைபெறும் என்றும் மாலையில் இருக்காது, மொத்தம் 16 அமர்வுகள் கூடி மானிய கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்றும் ஏற்கனவே சபாநாயகர் அறிவித்திருந்தார்.
அறிவிப்புகள்: நேற்றைய தினமும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய துறையின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக, 79,094 அடுக்குமாடி குடியிருப்புகள், 89,429 தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருவதாகவும், நீண்ட கால பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக சிதிலமடைந்த குடியிருப்புகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.
கட்டுமானம்: அத்துடன், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் 1,146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த மூன்று ஆண்டுக்குள் மறு கட்டுமானம் செய்யப்படும்" என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்
இந்நிலையில், இன்று காலை காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு தறைகள் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.. காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. இறுதியாக தனது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
குறிப்பாக, கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையை விதிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
மகளிர் உரிமைத்தொகை: வருவாய் துறை, தொழில் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்களும் நடைபெற்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் 110 விதியின் கீழ் துறைவாரியாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது..
கறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை ஏற்கனவே 1 கோடியே 15 லட்சம் பேர் பெற்றுவரும் நிலையில், மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அதனை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
அந்தவகையில், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் பரபரப்புடன் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. 9 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் காலவரையின்றி சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
-
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications