கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. ஒரு ரூபாய் கூட வராது! ’இந்த’ தப்பை மட்டும் செய்யாதீங்க..கவனம் மக்களே!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தற்போது கள ஆய்வு தொடங்கி இருக்கும் நிலையில் விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தமிழகத்திலிருந்து மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது தமிழகத்தை சேர்ந்த பெண்ணின் ஆதார் எண்ணின் அடிப்படையில் உத்தர பிரதேசத்தில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டதால் அங்கு பணம் வரவு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்த பின்பே மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.
தமிழக அரசின் மிகப்பெரிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்று 2 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கிய இத்திட்டம், தற்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஏற்கனவே 1.15 கோடி பெண்கள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையைப் பெற்றுவருகிறார்கள். இந்தத் தொகை, குடும்பச் செலவுகளைச் சுமக்கும் பெண்களுக்கு உண்மையான ஆதரவாக மாறி, பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ஆனால், கடந்த ஆண்டு பல தகுதியான பெண்கள் இந்தத் திட்டத்தில் இருந்து விடுபட்டதாகக் கூறிய நிலையில் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. அந்த வகையில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டன. கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கிய இந்த முகாம்களில் தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 18 லட்சம் பேர் புதிதாக உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை
இந்நிலையில், பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அப்டேட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். "உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கிடைத்த மனுக்களில் 40% மனுக்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய பயனாளிகளுக்கான தகவல் ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும். கடந்த முறை விடுபட்ட அனைவருக்கும் இம்முறை தொகை கிடைக்கும்" என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.
ரூ1000 உதவித்தொகை
இதன் மூலம், புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் நடைமுறை நவம்பர் மாதம் முடிந்ததும் டிசம்பர் அல்லது அதிக பட்சம் பொங்கல் பரிசாக தொடங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, இந்த ஆண்டுக்குள் புதிய பயனாளிகளும் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உறுதியாகியுள்ளது. அதோடு, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆதார் மற்றும் வங்கி கணக்கு
காரணம், இம்முறை தவறவிட்டால் மீண்டும் வாய்ப்பு பல ஆண்டுகள் கழித்து தான் கிடைக்கும். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த நேரத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவது புதிய அரசின் முடிவைப் பொறுத்தே இருக்கும். எனவே, கடைசி நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தகுதியான அனைத்து பெண்களும் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு மீண்டும் வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில் பொதுமக்கள் ஆதார் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்த பின்பே மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.
வங்கி கணக்கு பிரச்சனை
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் போது, மொபைல் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை மாற்றிக் கொடுப்பது, தவறுதலாக ஒரு எண் மாறுவது ஆகியவற்றால் கூட மகளிர் உதவித் தொகை கிடைக்காமல் போகலாம். தொலைபேசி எண்ணை சரியாக கொடுத்து வங்கி கணக்கு எண்ணை தவறாக கொடுத்தால் மெசேஜ் வரும். ஆனால் பணம் வராது. இ சேவை மையங்கள் மூலமோ அல்லது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? மொபைல் எண். வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என ஆராய்ந்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
-
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
செல்வப்பெருந்தகை திமுகவில் இணைகிறாரா? அந்த 1 முக்கிய லாபம்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி












Click it and Unblock the Notifications