கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 ரிசல்ட்.. அடுத்த விரிவாக்கத்தை நோக்கி தமிழ்நாடு! தினகரன் குழப்பறாரே
சென்னை: மகளிர் உரிமை திட்டம்தான் திமுகவின் அபார வெற்றிக்கு காரணமாக பேசப்பட்டு வரும்நிலையில், அமமுக தினகரன் இதற்கு முரணான கருத்தை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் ரிசல்ட் வெளியானதுமே, மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கடந்த மாதமே தகவல்கள் வெளியாகியிருந்தன..

கடந்த ஜனவரி மாதம், இந்த திட்டத்தில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்ட நிலையில், மீண்டும் இந்த திட்டத்தை பெண்களுக்காகவே விரிவுபடுத்தபட்டது.. கிட்டத்தட்டட 11.8 லட்சம் பேர் மறுவிண்ணப்பம் இதவரை தந்த நிலையில், விடுபட்டவர்களுக்கும் பணம் அனுப்ப எல்லாவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன... எனவே, மகளிர் உரிமைத்தொகையில் விண்ணப்பங்கள் எப்போது என்ற ஆர்வம் எழுந்தபடியே உள்ளது.
திமுக கூட்டணி: அதேபோல, நடந்த முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றியை பெற்றிருந்தது.. இதற்கு பிரதான காரணமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம்தான் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியிருந்தார்கள்.
உதாரணத்துக்கு, பாமக வலுவாக உள்ள தருமபுரி போன்ற தொகுதிகளிலும், திமுகவின் உரிமைத்தொகை திட்டம்தான் பிரதான வெற்றிக்கு காரணமாக இருந்ததாக கூறப்பட்டது. அந்த அளவுக்கு கிராமப்புறங்களில், திமுகவின் இந்த திட்டமானது மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமை திட்டம்: ஆனால், இதற்கெல்லாம் முரணான கருத்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.. லோக்சபா தேர்தலில் மகளிர் உரிமை தொகையை நிறுத்தி விடுவோம் என்று வாக்காளர்களை மிரட்டியும், பணம் கொடுத்தும்தான் திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றது என்று சாடியிருக்கிறார் தினகரன்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பொது செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அதிகார துஷ்பிரயோகம், பணத்தை கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கும் முயற்சியை தேசிய ஜனநாயக கூட்டணியினர் தடுத்து பாமக வேட்பாளர் அன்புமணியை வெற்றி பெற முயற்சிப்போம். இடைத்தேர்தலில் அதிமுக பயந்து பின்வாங்கியுள்ளது.
தென்மாவட்டம்: லோக்சபா தேர்தலில் திமுகவின் அணியாக செயல்பட்ட அதிமுக பொது செயலாளர் பழனிசாமி, தோல்வி பயத்தால் தான் இடைதேர்தலில் நிற்கவில்லை. தென் மாவட்ட 9 தொகுதிகளில் அதிமுக ஓட்டு சதவீதம் சரிந்துவிட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக 37 எம்பிக்கள் இருந்தும் தமிழக பிரச்னைகளை திமுக கூட்டணி சரி செய்ய முடிந்ததா? தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது... தமிழகத்தின் முக்கியமான காவிரி பிரச்சனையை தீர்க்க முடிந்ததா? மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று அந்த மாநிலம் சொல்லி வருகிறது. இதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார்.
காங்கிரஸ்: தமிழகத்தில் ஓட்டுக்களை வாங்க காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார் ஸ்டாலின். 40 தொகுதிகளிலும் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. இது நேர்மையான வெற்றி கிடையாது. 2026 சட்டசபை தேர்தலில் இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை. 2011 ல் திமுக மண்ணை கவ்வியதுபோன்றே, 2026 தேர்தலில் நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
தினகரனின் இந்த குற்றச்சாட்டுதான் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.. நடக்க போகும் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே அனைத்து கட்சிகளும் களப்பணியில் தீவிரமாகி உள்ளன.. அந்தவகையில் திமுகவின் மகளிர் உரிமைத்திட்ட விரிவாக்கமானது, மிகப்பெரிய மாற்றத்தை வரும் தேர்தலில், திமுகவுக்கு ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications