Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. 2 மாதத்தில் பெண்களுக்கு ரூ.1000

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று மே 29-ந்தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன... இதன் விரிவாக்க பணிகளை அடுத்த மாதம் தொடங்குவதற்கு ஏதுவாக விண்ணப்பங்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. தமிழகம் முழுவதும் இன்று 29-ந்தேதி முகாம்கள் ஆரம்பமாகும் நிலையில், பெண்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமைத்தொகை, ரேஷன் கார்டில் உள்ள குடும்பத்தலைவிக்கு வழங்கப்படுகிறது.

kalaignar magalir urimai thogai rs1000

விண்ணப்பங்கள்

இதற்கெனவே 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தகுதியான 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கும் பணியும் ஆரம்பமானது.. பிறகு விடுபட்ட 7 லட்சத்து 15 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

எனினும், விண்ணப்பித்த பலருக்கும் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று சலசலப்பு எழுந்தது.. இதைத்தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மறுபடியும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.. இதில், 11 லட்சத்து 86 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்கள் மட்டுமே திட்டத்தில் இணைக்கப்பட்டனர்.

அந்தவகையில் இப்போதைக்கு 1 கோடியே 14 லட்சம் பெண்கள் இந்த தொகையை பெற்று வரும்நிலையில், கிட்டத்தட்ட 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 25 லட்சம் பெண்கள் உரிமைத்தொகையை பெற முடியவில்லை. இதனிடையே சில மாதங்களுக்கு முன் குடும்ப அட்டைகள் வழங்குதல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் வழங்கப்பட்ட நிலையில், புதிதாக ரேஷன் அட்டை வாங்கியவர்களும் இந்த திட்டத்தில் இணைய வேண்டி உள்ளது.

சட்டப்பேரவையில் கேள்வி

இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.. மார்ச் மாதமே பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அடுத்த 3 மாதங்களில் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைக்கப்படுவார்கள் என்று அறிவித்தனர்.

இதையடுத்து, தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.. பெண்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து 2 மாதத்திற்குள் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் உத்தரவு

இதற்காக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.. வருகிற 4ம் தேதி முதல் இதற்கான முகாம்கள் கிட்டத்தட்ட 9000 இடங்களில் அமைக்கப்படும் என்றும் இதில், அதிகபட்சம் 15 லட்சம் பேர் வரை இணையலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், விரிவாக்கம் செய்யும்போது கூடுதல் தளர்வுகளை அரசு கொண்டுவரும் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை, மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கான முகாம் தமிழகம் முழுவதும் இன்று 29-ந்தேதி ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பதாரரின் பெயர், ஆதார் எண், குடும்ப அட்டை எண், திருமண நிலை, தொலைபேசி எண், தற்போது வசிப்பது சொந்த வீடா, வாடகை வீடா, மாவட்டம், மின் இணைப்பு எண், வங்கியின் பெயர், கிளையின் பெயர், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஒரிஜினல் ஆவணங்களையும் வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு கொண்டு வந்து அங்குள்ள அலுவலர்களிடம் அதை காட்டி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்... விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்தும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+