கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. ரூ.1000 வாங்கியாச்சா? வீட்டுக்கே வந்து "இன்ப அதிர்ச்சி" தந்த தமிழக அரசு
சென்னை: மகளிர் உரிமைத்தொகையில் இன்னொரு சிறப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பானது, பெரும் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.
மகளிர் உரிமைத்தொகையில், 1000 ரூபாய் கிடைக்காதவர்களுக்கு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டிருப்பின், அதற்கான காரணங்களும் பயனாளிகளுக்கு அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.. ஒருவேளை, பயனாளிகள் உரிமைத்தொகை பெற தகுதியுடையவர்கள் என்று கருதும் பட்சத்தில் அவர்களை இ-சேவை மையங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.
இதனிடையே, மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரர்களே அறிந்து கொள்வதற்காகவே, வெப்சைட் (https://kmut.tn.gov.in) ஒன்றும் தொங்கப்பட்டுள்ளது..

விண்ணப்ப நிலைமை: இந்த இணையதளத்தில் ஆதார் எண்ணையும், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணையும் பதிவிட்டால், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் வரும்.. அந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளம் 2 நாட்களாகவே இயங்கவில்லை. தற்போது பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, விண்ணப்பங்கள் நிகாகரிக்கப்பட்டவர்களோ மேல்முறையீடு செய்வது எங்கே என தெரியாமல் தவிக்கிறார்கள். அதனால், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபடியே உள்ளதால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்காகவே, சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இ சேவை: இதைத்தொடர்ந்து மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டோர் 18 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இ சேவை மூலமாக மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக மெசேஜ் வந்தும், வங்கி கணக்கில் பணம் வரவு ஆகவில்லை என்று பரவலாக புகார் எழுந்தது.. இதுகுறித்து தமிழக அரசு தற்பாது ஒரு விளக்கம் தந்துள்ளது.. அதன்படி, பணம் கிரெடிட் ஆகாதவர்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தால் பணம் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆதார் எண்: இப்படிப்பட்ட சூழலில், ஆதார் எண் இணைக்கப்படாத பயனாளிகளுக்கு அஞ்சல் துறை "மணியார்டர்" மூலமாக ஓரிரு நாட்களில் பணம் அனுப்பி வைக்க போவதாக தகவல் வெளியானது.. அந்த மணியார்டர்கள் இப்போது பெண்களுக்கு தரப்பட்டு வருகிறதாம்..
கடந்த 2 தினங்களாகவே, சத்தமே இல்லாமல் பல பெண்களுக்கு தபால் துறை மூலம் மணி ஆர்டரில் வீடு தேடி சென்று போஸ்ட்மேன்கள் மகளிர் உரிமை தொகையை கொடுத்து வருகிறார்களாம்.. இதனால் மகளிர் உரிமை தொகை கிடைக்காத ஏமாற்றத்தில் இருந்த பெண்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
இன்ப அதிர்ச்சி: மகளிர் உரிமை தொகைக்காக கொடுத்த வங்கி, ஆதார் விவரங்களில் தவறு இருந்தால் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த முடியாது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக தமிழக அரசு, மணி ஆர்டரில் மகளிர் உரிமை தொகை கிடைக்கச் செய்துள்ளது. விண்ணப்பத்தில் விவரங்களை சரியாக கொடுக்காதவர்களுக்கு காரணம் காட்டி நிறுத்தி வைக்காமல் மணி ஆர்டர் மூலமும் பணம் அனுப்பி வைத்த தமிழக அரசின் இந்த அதிரடியை பெண்கள் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications