அட்றா சக்கை..வரப் போகுது அனைவருக்கும் ரூ.1000! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்! 4ஆம் தேதிய மறக்காதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் பெண்களின் வாக்குகளை கவர திமுக திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. தகுதி பெறாத பெண்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் மாதம் நான்காம் தேதி முதல் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கும் நிலையில், இதற்காக 9000 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

2021 தேர்தலை திமுக வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒன்று மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன போதும் நிதி நிலைமையை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாத நிலையில் 2023 செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்பு அது தகுதியுள்ள மகளிருக்கு என மாற்றியமைக்கப்பட்டது. இதனால் பலர் விண்ணப்பித்தும் பயன்பெற முடியாமல் போனது. இதனால் மகளிரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.

Magalir Urimai Scheme Tamil Nadu mk stalin

பிறகு பட்டியல் சரிபார்க்கப்பட்டு சிலர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். மாதந்தோறும் 15ஆம் தேதி அவரவர் வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் நிலையில், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், விடுபட்ட தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என தொடர்ந்து திமுகவினரிடம் குறை கூறி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. மேலும் ஜூன் மாதம் நான்காம் தேதி முதல் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறி இருந்தது. இதற்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு எனவே தனியாக இணையதளம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் பயனாளிகள் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 9000 இடங்களில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது.

மக்களுடன் முதல்வர் முகாம் ஏற்கனவே தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் நிலையில், மகளிர் உரிமை தொகைக்கு என்றே இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக சென்னையில் வட்டாட்சியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தாலுகா வாரியாக முகாம்களை நடத்தும் இடங்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில் விண்ணப்பித்தால் ஜூலை, ஆகஸ்ட், கழித்து செப்டம்பர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு லட்சத்திற்கும் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 3600 யூனிட்டுக்கு குறைவாகவே மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்கு குறைந்த நன்செய் நிலம், 10 ஏக்கருக்கு குறைந்த புஞ்சை நிலம் வைத்துள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தில் சேரலாம். அதே நேரத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்த பயன்பாட்டுக்கு நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட பலர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+