கலைஞர் மகளிர் உதவித்தொகை ரூ.1000.. ஸ்பாட்டில் அசத்திய மதிவேந்தன்! நாமக்கல் பெண்ணுக்கு ஒன்னுமே புரியல
சென்னை: தமிழகத்தில் மகளிர் உதவித்தொகை திட்டம் மூலம் ஒரு கோடிக்கு அதிகமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் அடுத்தடுத்து சில நல்ல செய்திகள் வர இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது... முதலில், அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பிறகு, தமிழகத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, "தகுதி வாய்ந்த" ஒரு கோடி பெண்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பம்: அதன்படி ஒரு கோடியே 67 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் முதற்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உரிமைத்தொகை பெற்றனர்.
அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.. இதைத்தவிர, கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்காகவும், விரிவுபடுத்தபட்டு, அதற்கான ஆணையும் வெளியானது.. மொத்தம் 105 மறுவாழ்வு முகாம்களை சேர்ந்தவர்களுக்கு, இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், 19487 குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டத்தினால் பலன் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குடும்பத்தலைவன்: ஏற்கனவே முகாமிலிருக்கும் குடும்ப தலைவருக்கு ரூ.1500, மற்ற நபர்களுக்கு ரூ.1000, குழந்தைகளுக்கு ரூ.750 மாதம்தோறும் வழங்கபட்டு வரும்நிலையில், பெண்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
எனினும், உரிமைத்தொகை பெற விண்ணப்பித்து தகுதிகள் இருந்தும் ரூ.1000 கிடைக்கவில்லை என்று பல பெண்கள் புகார்களை கூறிவருகிறார்கள்.. இவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உதவித்தொகை: இதுகுறித்து உதயநிதி சொல்லும்போது, "1 கோடி பேருக்கு இந்த திட்டத்தில் கொடுக்க வேண்டும்... ஆனால், விண்ணப்பித்தவர்களே 1.60 கோடி பேர் என்பதால், 1.16 கோடி பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.. இதில் பணம் கொடுக்கப்படாமல் போன மற்றவர்களுக்கும், இன்னும் 2 மாதத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டுவிடும். எப்படி பார்த்தாலும், தேர்தல் முடிந்ததும் பணம் தந்துவிடுவோம் என்பதால், கவலை வேண்டாம்" என்று உறுதி தந்துள்ளார் உதயநிதி.
ஒரு கோடி 63 லட்சம் பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை தேர்தலுக்கு பிறகு வழங்கப்படும் என்ற இந்த அறிவிப்பானது, பெண்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
உரிமைத்தொகை: இந்நிலையில், இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. நாமக்கல்லில் தேர்தல் அலுவலக திறப்பு நிகழ்ச்சிக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெண் எழுந்து நின்று, "மகளிர் உரிமைத்தொகை தனக்கு வரவில்லை என்றும், அதற்கு வழி செய்து தாருங்கள்" என்றும் மதிவேந்தனிடம் கோரிக்கை வைத்தார்.
இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.. உடனே அங்கிருந்தவர்கள், அமைச்சர் பேசி முடிக்கட்டும், அதற்கு பிறகு கேளுங்கள்" என்றார்கள்.. இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்தபிறகு, அமைச்சரிடம் மீண்டும் தன்னுடைய குறையை கூறினார் அந்த பெண்.
மதிவேந்தன்: உடனே அமைச்சர் மதிவேந்தன், டக்கென செல்போனை எடுத்து, அதிகாரிகளுக்கு போன் போட்டார்.. சம்பந்தப்பட்ட பெண்ணின் தகவல்களை எல்லாம் சொல்லி, உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் விடுபட்டுள்ளதாகவும், தேர்தல் முடிந்ததுமே, உடனடியாக அந்த பெண்ணின் பெயரை லிஸ்ட்டில் இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்..
தன்னுடைய புகாரை சொன்னதுமே, ஸ்பாட்டிலேயே இந்த பிரச்சனை சம்பந்தமாக அமைச்சர் நடவடிக்கை எடுத்ததை பார்த்து, அங்கிருந்த அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.. கோரிக்கை வைத்த பெண்ணும், அமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை சொல்லிவிட்டு போனார்...!!!












Click it and Unblock the Notifications