மகளிர் உரிமை தொகை 1000.. குடும்ப தலைவிகளே.. வீடுகளுக்கு வரப்போறங்க.. ஏன் தெரியுமா?
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் உதவிதொகை பெறுவதற்கான 3 நாட்கள் சிறப்பு முகாம் நேற்றுடன் முடிந்த நிலையில், பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு செய்ய வருவாய்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்யக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது. ஒரு கோடி பெண்களுக்கு இந்த திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்பட உள்ளதாகவும், வரும் அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு உரிமைத் தொகை அளிக்க ரூ.7 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். கடந்த ஜூலை 24 முதல் ஆக.4-ம் தேதி வரையும் முதற்கட்ட முகாமிலும், ஆகஸ்ட 5 முதல் ஆகஸ்ட 12-ம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாமிலும் ஏராளமான பெண்கள் விண்ணப்பித்தனர் . இதில், ஒட்டுமொத்தமாக 1.54 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் மற்றும் ஓய்வூதியம், உதவித்தொகை பெறும் குடும்பத்தில் உள்ள பெண்கள் விண்ணப்பிப்பதற்கான 3 நாள் சிறப்பு முகாம் (ஆக 18, 19, 20) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படியே தமிழகம் முழுவதும் கடந்த 18-ம் தேதி சிறப்பு முகாம்கள் தொடங்கின.
முதல் நாளிலேயே அதிக அளவில் பெண்கள் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பதிவு செய்தனர். நேற்று சிறப்பு முகாம் நிறைவு பெற்ற நிலையில், இந்த 3 நாட்களில் எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள் என்ற விவரம் இன்று வெளியிடப்பட உள்ளது.
வருவாய் துறையின்கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவோரின் குடும்பத்தில் தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1000 வழங்கப்பட உள்ளது.

அதேநேரம் குடும்ப வருமானம் 2.50 லட்சத்தைத தாண்டக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் விண்ணப்பித்துள்ள. 1.50 கோடிக்கும் அதிகமனோரில் கிட்டத்திட்ட ஒரு கோடி பேருக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. அதேநேரம் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. தகுதியானவர்களை தேர்வு செய்ய மென்பொருள் உதவியை நாடியுள்ள தமிழக அரசு, கள ஆய்வும் செய்ய அதிகாரிகளை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. களிர் உரிமை தொகை 1000.. குடும்ப த
எனவே தற்போது விண்ணப்ப பதிவு முடிந்துள்ள நிலையில், வருவாய் துறையினர், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் , எந்த வீடுகள் தொடரபாக விவரங்கள் தேவைப்படுகிறதோ அந்தந்த வீடுகளுக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட உள்ளார்கள். வீடுகளில் களஆய்வுக்கு பின்னர் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications