Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1000 ரூபாய்.. அடுத்தடுத்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு.. ரெடியா இருங்க.. கிளம்பி வர்றாங்களாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறும்வகையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் முக்கிய தகவல் ஒன்று வெளியிட்டுள்ளார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில், இன்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு, கூட்டுறவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: கூட்டுறவுத்துறை அனைத்து நியாயவிலைக்கடையில் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை அவர்களது வீடுகளிலே கொண்டு சேர்க்கும் பணியினை முதற்கட்டமாக வழங்கியுள்ளார்கள். அதை இரண்டு பிரிவுகளாக, முதற்கட்டமாக வருகின்ற 24ம் தேதி முதல் முகாம்கள் தொடங்க இருக்கிறது.

Kalaingar Magalir Urimai Thogai and Minister says about womens entitlement amount bank account

ரேஷன் கடை: அதற்கு முன்னதாக ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக, விண்ணப்பங்களை அவர்களது இல்லங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்வார்கள். அப்போது, உரிமைத்தொகை விண்ணப்பங்களை 24ம் தேதி முதல் எப்போது திரும்ப முகாம்களில் வழங்க வேண்டும் என்ற விவரத்தை தெரிவிப்பார்கள். இந்தப்பணியானது வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறும்.

இதற்கு பிறகு, 2ம் கட்டமாக ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இந்தப்பணி நடக்கும். இதற்கான விண்ணப்பங்களை எவ்வாறு வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பது குறித்து திட்டமிடுவதற்காக கூட்டுறவுத்துறை செயலாளர், பதிவாளர், இணைப்பதிவாளர்கள், கூடுதல் பதிவாளர்கள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

டோக்கன்கள்: இக்கூட்டத்தில் மாவட்டம்தோறும் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வந்து சேர்ந்து விட்டதா என்பன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளார்கள். 2 கட்டமாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கடைகள் பிரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறுவதற்கான நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி சில இடங்களில் முதற்கட்டமாக 60 சதவீதமும், இரண்டாம் கட்டமாக 40 சதவீதமும் செயல்படுத்தவும், சில இடங்களில் 50 :50 என்ற விகிதத்திலும், சில இடங்களில் 500 குடும்ப அட்டை உள்ள கடைகளில் முதற்கட்டமும், 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் இரண்டாம் கட்டமும் என சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனைத்து இடங்களிலும் குறிப்பாக மலைப்பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும் தாமதமின்றி விண்ணப்பங்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள்: விண்ணப்பங்கள் வழங்கும் போது, வங்கி கணக்கு இல்லாத பயனாளர்களை வங்கி கணக்கு துவக்க வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், கூட்டுறவு வங்கிகளில் இப்போது, 75000 முதல் 100000 வரையிலான புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, 21 லட்சம் புதிய வங்கி கணக்குகள் தொடங்க வழிவகை செய்யப்படும்.

மேலும், இப்பணிகளை கண்காணிக்க மூன்று மாவட்டங்களுக்கு ஒரு கூடுதல் பதிவாளர் என அனைத்து மாவட்டங்களுக்கும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தினை மக்களிடத்திலே முழுவதுமாக கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+