சத்தமின்றி ஓடிகொண்டிருக்கும் முக்கிய வாரிசு.. தள்ளாத வயதிலும் மகனுக்காக ஓட்டு கேட்கும் ஆற்காட்டார்
Recommended Video

வடசென்னை: "வாக்கு வித்தியாசத்தை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை.. வெற்றி தான் என் இலக்கு.. என் முழு பலத்தை வைத்து கொண்டு ஓடிக் கொண்டு இருக்கிறேன்" என்று வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
வாரிசுகளுக்கு சீட் என்ற சர்ச்சையை தாண்டி வடசென்னை வேட்பாளராக அறிமுகமாகி உள்ளார் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி. முதல் பிரச்சாரம் என்ற சென்டிமென்ட்காகவோ என்னவோ, தந்தையை கூடவே அன்று அழைத்து வந்திருந்தார்.
சில காலமாகவே முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வரும் ஆற்காடு வீராசாமியும் மகனுக்காக தள்ளாத வயதிலும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாகிவிட்டார்.

திமுக கவனம்
பொதுவாக வட சென்னை திமுகவின் வலுவான தொகுதி என்றாலும், போன முறை வெங்கடேஷ்பாபு திமுக வேட்பாளர் கிரிராஜனை தோற்கடித்து முந்தி கொண்டு சென்றவர். அதனால் இந்த முறை தொகுதி விவகாரத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கிறது திமுக.

கருணாநிதியின் நிழல்
இதற்காக அக்கட்சி தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும்போதுகூட, "கருணாநிதியின் நிழலாக அவர் சொன்னதை எல்லாம் செய்து காட்டியவர் ஆற்காடு வீராசாமி. இப்போது அவரது மகன் கலாநிதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வாரிசுகளை நிறுத்தியிருப்பதாக விமர்சிக்கிறார்கள். வாரிசு என்பதற்காக தகுதியானவர்களுக்கு வாய்ப்பு மறுக்க வேண்டுமா என்ன? கலாநிதியை வெற்றி பெற அனைவரும் முயற்சிக்க வேண்டும்" என்றார்.
யாருக்கு அரியணை?முடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு

காளியம்மாள்
இதையடுத்து கலாநிதிக்காக உதயநிதியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகிறார். இவருக்கு பரிச்சயமான தொகுதிதான். ஆனால் விஜயகாந்த் நேரடியாக களத்துக்கு வராதது பெரிய மைனஸ்தான்! ஆனால் கலாநிதிக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சி காளியம்மாள் டஃப் கொடுத்து கொண்டிருக்கிறாராம்!

மக்கள் கணிப்பு
எனினும், திமுகவின் முக்கிய புள்ளிகள் பெரும்பாலும் வடசென்னை தொகுதியிலேயே சுற்றி சுற்றி வந்து கலாநிதிக்காக வாக்கு சேகரிப்பது அரசியல் பலத்தை காட்டுவதுடன், திமுகவின் கோட்டை வடசென்னைதான் என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தி செல்கிறதாக தொகுதி மக்கள் சொல்கிறார்கள்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications