Kaliyammal: காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி இருந்த காளியம்மாள் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் காளியம்மாள் அதிமுக சார்பில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதியில் களமிறக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீமானின் நாம் தமிழர் கட்சியில் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். இவர் கருத்து வேறுபாடு காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார். அவர் விஜயின் தவெகவில் இணைய உள்ளதாகவும், திமுகவில் சேர உள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் தான் காளியம்மாள் இன்று அதிமுகவில் இணைந்தார். சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காளியம்மாள் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.
காளியம்மாளுக்கு புதிய பதவி
அதிமுகவை பொறுத்தவரை தற்போது கட்சியில் பெண் பிரமுகர்கள், பேச்சாளர்கள் பிரபலமாக இல்லை. தற்போது காளியம்மாள் சேர்ந்து இருப்பது அதிமுகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமையும். மேலும் கருத்துகளை தடையின்றி எளிய மொழியில் பேசும் திறமை காளியம்மாளிடம் உள்ளது. இதனால் அவரை இந்த தேர்தலில் அதிமுக நன்கு பயன்படுத்தி கொள் வாய்ப்புள்ளது. மேலும் கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற கூறப்படுகிறது.
மயிலாடுதுறையில் போட்டி?
இந்நிலையில், தான் அதிமுக சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் காளியம்மாள் மயிலாடுதுறை சட்டசபை தொகுதியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காளியம்மாள் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
நாகப்பட்டினத்தின் ஒரு பகுதியாக தான் மயிலாடுதுறை இருந்தது. அதன்பிறகு கடந்த 2020ம் ஆண்டில் தான் மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிந்தது. இருப்பினும் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் காளியம்மாள் போட்டியிட்டார்.
பின்னணி என்ன?
இந்த தேர்தலில் அவர் சுமார் 1.27 லட்சம் வாக்குகளை (11.7% வாக்குகள்) பெற்றார். நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் தனித்து களமிறங்கிய நிலையில் காளியம்மாள் இவ்வளவு ஓட்டுகளை பெற்றார். இது மயிலாடுதுறை தொகுதியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை எடுத்து காட்டுகிறது. இதனால் இந்த முறை காளியம்மாளை மயிலாடுதுறை சட்டசபை தொகுதியில் களமிறக்கினால் வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார்.
வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை
மேலும் மயிலாடுதுறை சட்டசபை தொகுதியில் கடைசியாக அதிமுக 2016ம் ஆண்டில் வெற்றி பெற்றது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாமகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. பாமக சார்பில் அ.பழனிசாமி போட்டியிட்டு 70,900 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் 73,642 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 2,742 தான். இதனால் இந்த முறை காளியம்மாளை மயிலாடுதுறையில் இறக்கினால் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி நம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்?












Click it and Unblock the Notifications