Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சி: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புத்தொகை.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெற்றோரை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும். பெற்றோர் ஒருவரை இழந்த குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவை அரசே ஏற்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்த பிரச்சினையை கண்டு ஓடி ஒளிபவன் நான் இல்லை என்றும், இந்த சம்பவத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும் ஸ்டாலினி கூறினார்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: - அரசியல் காரணங்களுக்காக தனது கட்சியினரோடு எடப்பாடி பழனிசாமி வெளியே சென்றுவிட்டார். அவருக்கும் சேர்த்தே நான் பின்வரும் விவரங்களை இங்கே தெரிவித்து கொள்கிறேன்.

assembly kallakurichi liquor death tamil nadu AIADMK Tamil Nadu Assembly session Edappadi Palaniswami

நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் 47 பேர் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தது மிகவும் துயரமான சம்பவம். உங்களை போலவே நானும் இதையறிந்து மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களுக்கு என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என ஆறுதலை கூறுகிறேன்.

கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அறிந்ததும் உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அவசர மருத்து உதவிகளை செய்திட வலியுறுத்தினேன். மருத்துவ பணிகளை விரைவு படுத்திட கூடுதலாக 57 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரசு மருத்துவமனையில் இதுபோன்ற நிகழ்வுகளின் போது போதுமான அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டனர். இந்த சம்பத்தால் 164 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 117 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜ் என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவருடன் தாமோதரன், மதன், விஜயா கோவிந்தராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்புடையவர்களையும் கைது செய்ய அறிவுறுத்தியுள்ளேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு துயர சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

* பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரை அவர்களது கல்வி செலவினை தமிழக அரசே ஏற்கும்.

* பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை அவர்களின் பராமரிப்பு செலவிற்காக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

* பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.

* பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும். பெற்றோர் ஒருவரை இழந்த குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவை அரசே ஏற்கும். பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பிரச்சினையை கண்டு ஓடி ஒளிபவன் நான் இல்லை. பொறுப்பை உணர்ந்து பதில் அளித்துள்ளேன். அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டு சொல்ல முடியும். ஆனால் இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+