சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெக் டு நெக் செம டஃப் கொடுத்த கமல்.. தோல்வியிலும் விஸ்வரூபம் எடுத்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர்!

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இரண்டாம் இடம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை இந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

Recommended Video

    Kamal கொடுத்த Tough! தோல்வியிலும் விஸ்வரூபம் | OneIndia Tamil

    தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அம்மன் அர்ஜுனன் 59,788 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் 42, 369 வாக்குகளை பெற்று இரண்டாவது இடம் பெற்றார்.

    தனி ஒருவனாக கடைசி வரை போராடி கமல்...மக்கள் நீதி மய்யம் வாஷ்அவுட் தனி ஒருவனாக கடைசி வரை போராடி கமல்...மக்கள் நீதி மய்யம் வாஷ்அவுட்

    இதைத் தொடர்ந்து பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் 33,113 பெற்று மூன்றாவது இடம் பெற்றார். இந்த நிலையில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது.

    மூத்த தலைவர்கள்

    மூத்த தலைவர்கள்

    இந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. காரணம் இங்கு போட்டியிட்ட கமல்ஹாசன்தான். அது போல் வானதியும் மயூரா ஜெயக்குமாரும் அவரவர் கட்சிகளின் மூத்த தலைவர்கள்.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    கோவை தொகுதியை கமல்ஹாசன் தேர்வு செய்ய இரு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று தொழில் துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தொழிற்சாலைகள் நிறைய கோவையிலிருந்து எம்எல்ஏவாக தேர்வாவது, மற்றொன்று பாஜகவை எதிர்த்து கமல் போட்டியிட விரும்பியது.

    இரண்டாவது இடம்

    இரண்டாவது இடம்

    மயூரா ஜெயக்குமார் கடந்த தேர்தலில் இரண்டாவது இடத்தையும் வானதி ஸ்ரீனிவாசன் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள் என தெரிந்தும் அங்கு போட்டியிட்ட கமல்ஹாசனை பாராட்டித்தான் ஆக வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது வானதிக்கும் மயூராவிற்கும் டஃப் கொடுத்தார் கமல்.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    ஒரு கட்டத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்த கமல்ஹாசன், வானதியுடன் மட்டுமே கடுமையாக போராடினார். இறுதியில் ஆயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வானதி வென்றார். கமல் தோற்றாலும் பாராட்ட வேண்டிய விஷயம் உள்ளது.

    சாதனை

    சாதனை

    அதாவது கடந்த தேர்தலில் இரண்டாவது இடம் பெற்ற மயூரா ஜெயக்குமாரை, பாரம்பரிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு கமல்ஹாசன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இது நிச்சயம் சாதாரண விஷயம் அல்ல. கமல்ஹாசனின் சாதனையே!

    English summary
    MNM President Kamal Haasan has made tremendous achievement in Coimbatore South.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X