சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட்டில் நீதிக்கு இடம் உண்டா?.. கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா.. 7.5% உள்ஒதுக்கீடு குறித்து கமல்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா, கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா என மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என 7.5. சதவீத உள் ஒதுக்கீடு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

செப்டம்ர் 15ம் தேதி தமிழக அமைச்சரவை நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இன்று வரை ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.

Kamal Haasan asks about 7.5 percentage Internal reservation in Medical seats

எனவே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது பெரிய ட்விஸ்ட் .. நீட் குளறுபடி.. கேள்வி எழுப்பிய மாணவர்களை.. அதிர வைத்த தேசிய தேர்வு முகமைஇது பெரிய ட்விஸ்ட் .. நீட் குளறுபடி.. கேள்வி எழுப்பிய மாணவர்களை.. அதிர வைத்த தேசிய தேர்வு முகமை

இன்றைய தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், சிவி சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்து உள்ஒதுக்கீடு குறித்து வலியுறுத்தினர்.

Kamal Haasan asks about 7.5 percentage Internal reservation in Medical seats

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தேர்விலேயே ஆள் மாறாட்டம், முடிவுகளில் முழுக் குழப்பம். இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு, உள் ஒதுக்கீடும் துறப்பு.

கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள் என்றார்.

English summary
Makkal Needhi Maiam President Kamal Haasan asks about 7.5 percentage Internal reservation in Medical seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X