ராணி 2-ம் எலிசபெத் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு மருதநாயகம்- கமல்ஹாசன் நெகிழ்ச்சி இரங்கல்
சென்னை: மறைந்த பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத் தம் வாழ்நாளில் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு 25 ஆண்டுகளுக்கு நடைபெற்ற மருதநாயகம் பட விழாதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவு:

எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்
25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
1997-ம் ஆண்டு இந்தியாவுக்கு 3-வது முறையாக 2-ம் எலிசபெத் மகாராணி வருகை தந்தார். அப்போது சென்னை தரமணி எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் மருதநாயகம் திரைப்பட தொடக்க விழாவில் பங்கேற்றார் 2-ம் எலிசபெத். இந்த விழாவில் சுமார் 20 நிமிடங்கள் கலந்து கொண்டார் எலிசபெத் மகாராணி.
அப்போது தமிழக முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1750களில், இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வரி வசூல் உரிமையை பெற்றது; அப்போது கிழக்கிந்திய கம்பெனியில் இருந்த கான்சாகிப் யூசுப்கான் என்ற மருதநாயகம், வாழ்நாளின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்து வீரம் செறிந்த யுத்தம் நடத்தி வீரச்சாவடைந்தார். வரலாற்றில் அதிகம் அறியப்படாத மருதநாயகத்தின் வாழ்க்கையைத்தான் கமல்ஹாசன் ரூ80 கோடியில் திரைப்படமாக்க திட்டமிட்டு படத் தொடக்க விழாவை நடத்தினார். ஆனால் மருதநாயகம் திரைப்படம் கைவிடப்பட்டது. இருந்தபோதும் இன்றும் மருதநாயகம் திரைப்படம் எதிர்பார்ப்பை தரக் கூடிய பேசுபொருளாக தொடருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications