முகப்பு படமே அவர் படம்தான்.. ஆனாலும் அரசின் அறிவிப்பை பாராட்டவில்லை.. கமல் மவுனம் ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : ட்விட்டரில் முகப்பு படமே பாரதியார் படத்தை போல் தான் தன் படத்தை கமல்ஹாசன் வைத்திருக்கிறார். ஆனால் அவரது நினைவு நாளான இன்று அவரை பற்றிய பதிவையே மதியத்திற்கு மேல் தான் போட்டார். அதேநேரம் பாரதியார் பிறந்த நாளை மகாகவி நாளாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை இதுவரை பாராட்டவும் இல்லை. கருத்தே கூறவில்லை.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலதும் இல்லாமல் இடதும் இல்லாமல் மையாக அரசியலை தொடங்கினார். சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் கொங்கு மண்டலப்பகுதிகளில் கணிசமாக வாக்குகளை பெற்றார்.

பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகளை திமுகவினர் முன்வைத்த வருகிறார்கள். அதை மெய்பிக்கும் வகையில் மத்திய அரசை விமர்சிக்கும் போது பொத்தாம் பொதுவாகவே பேசுவது உண்டு.

வரவேற்கவில்லை

வரவேற்கவில்லை

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது ஆட்சி அமைக்கும் முன் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கமல். அவர் பிக்பாஸில் பேசிய பல விஷயங்கள் தற்போது அரசின் முடிவாக மக்களுக்கு கிடைக்கிறது, ஆனால் அதை வரவேற்காமல் கமல் இருப்பதும், மத்திய அரசை விமர்சிக்கும்போது பொத்தாம் பொதுவாக போட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்வதும், தமிழக அரசை விமர்சிக்கும்போது நேரடியாக விமர்சிப்பதும் கமலின் வாடிக்கையாக உள்ளது.

கருத்து இல்லை

கருத்து இல்லை

இதுவரை 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு ட்வீட் கூட கமல் போடவில்லை . அதேபோல் பாரதியாரை தனது ஆதர்ச நாயகராக சொல்லும் கமல் டிபியில் பாரதியார் ஸ்டைலில் தான் படமே வைத்துள்ளார். அப்படிப்பட்டவர் தமிழக அரசு பாரதியார் நினைவு நூற்றாண்டு தினத்தை மகா கவி தினமாக அறிவித்தது குறித்து வாயே திறக்கவில்லை, மகாகவியின் நினைவு அஞ்சலியைக்கூட மதியம்தான் அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கமல் தனிப்பாதை

கமல் தனிப்பாதை

தனது ஆதர்ச கவியின் நினைவாக அரசு அறிவித்துள்ள பல்வேறு அறிவிப்புகளை அரசியலை மீறி வரவேற்பார் என பலரும் எதிர்ப்பார்ப்பில் இருப்பர். திமுகவின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இங்கு பாராட்டு தெரிவித்ததையும் கவனத்தில் கொள்ளவேண்டும், நல்லதொரு ஆரோக்கிய அரசியல் நிகழ்வை நோக்கி தமிழகம் நகரும்போது கமல் மட்டும் தனிப்பாதையில் பயணிக்க முடியாது.

பாரதியார்

பாரதியார்

இதனிடையே கமல்ஹாசன் பாரதியார் குறித்து வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், தமிழ் நிலத்திற்கென பெரும் கனவுகளைத் தந்துவிட்டுச் சென்ற பாரதி, தமிழறிந்த ஒவ்வொருவரிலும் வாழ்கிறார். அவரவர் துறையின் பாரதியாக முயல்வதே பெரும்கவிஞனின் நினைவைப் போற்ற ஆகச்சிறந்த வழி என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+