நாங்களா கேட்கறதை விட ரஜினியே எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்- கமல் நம்பிக்கை
சென்னை: ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவராகவே எங்களுக்கு ஆதரவு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். அதனால் அது நிச்சயம் வெல்லும் கூட்டணியாகவே இருக்கும்.
மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அது குறித்து அறிவிக்கப்படும். இதுவரை பெற்ற விருப்ப மனுக்கள் மீது நாளை முதல் மார்ச் 15 வரை நேர்காணல் நடத்தப்படும்.
ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் கமல்ஹாசன். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என கூறியுள்ள ரஜினிகாந்த், தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்போருக்கு வாக்களியுங்கள் என்றும் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications