மத்திய பட்ஜெட்: முதலாளிகளுக்கு ஆதரவு; மக்களுக்கு ஏமாற்றம்... கமல்ஹாசன் நறுக் டுவிட்!
சென்னை: மத்திய பட்ஜெட் மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் 2021-22-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால லாக்டவுண்.
ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications