சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் வழி எம்ஜிஆர் வழி.. உங்கள் வழி கூவத்தூர் போகும் வழி.. கூவத்தூரையே கெடுத்துட்டீங்க.. கமல்

Google Oneindia Tamil News

சென்னை: என் வழி எம்ஜிஆரின் வழியாகும். உங்கள் வழி கூவத்தூர் போகும் வழியாகும். நல்லாயிருந்த கூவத்தூரை கெடுத்துவிட்டீர்கள் என கமல்ஹாசன் பேசினார்.

Recommended Video

    என் வழி எம்ஜிஆர் வழி.. உங்கள் வழி கூவத்தூர் போகும் வழி.. கூவத்தூரையே கெடுத்துட்டீங்க.. கமல் - வீடியோ

    தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பூந்தமல்லி, போரூர் ஆகிய பகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது : எனக்கு பல இடங்களில் பேச அனுமதி இல்லை. தற்போது பேச வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதனால் பேச வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன்.

    மதுரையில் கல்யாணம் ஆனதை மறைத்து.. 12ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி சீரழித்த இளைஞர் கைதுமதுரையில் கல்யாணம் ஆனதை மறைத்து.. 12ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி சீரழித்த இளைஞர் கைது

    தனி நகரம்

    தனி நகரம்

    பூந்தமல்லி தனி நகரத்திற்கு உரிய தகுதியுடையது. வசதிகள் அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பாதி நகரம், பாதி கிராமமாக உள்ளது. இந்தப் பகுதி விவசாயிகளின் நீர் மேலாண்மையை அரசு கவனிக்கவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி கோடையில் வறண்டும், மழை காலத்தில சென்னையை வெள்ளக் காடாகவும் மாற்றி விடுகிறது.

    பூந்தமல்லியில்

    பூந்தமல்லியில் "பூ" இல்லை

    பூந்தமல்லியில் பூ உதிர்ந்து விட்டது. செழிப்பாக வேண்டுமென்றால் நியாயமான அரசு வேண்டும். எம்.ஜி.ஆர் பெயரை நான் சொன்னதும் கோபப்படுகிறார்கள். தொழில் கெட்டு விடுமோ என பயந்து விடுகிறார்கள். எம்.ஜிஆர் படத்தை இத்தனை நாள் ஸ்டாம்ப் சைஸில் போட்டார்கள்.

    கூவத்தூர் வழி

    கூவத்தூர் வழி

    எம் ஜி ஆர் வழியில் நான் போகிறேன். உங்கள் வழி கூவத்தூர் போகும் வழி . நல்ல ஊராக இருந்தது இவர்கள் வந்து கெடுத்து விட்டார்கள். ஊரே இப்படி இருந்தால் கோட்டை என்னவாகும், அதை மாற்ற வேண்டும். நான் மெதுவாக போகிறேன். விரைவில் பறக்க ஆரம்பித்து விடுவேன்.

    மக்கள் ஆதரவு

    மக்கள் ஆதரவு

    என் மீது அன்பு காட்டும் அளவுக்கு விமர்சனம் செய்யலாம். அந்த உரிமையை நான் தருகிறேன். ஆனால் அவர்களை விமர்சனம் செய்ய முடியாது. அவர்களால் தாங்க முடியாது. நாளை நமதே என்று அவர் பேசினார். கமல்ஹாசன் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள்.

    English summary
    Makkal Needhi Maiam President Kamal Haasan says that mine is MGR's path. But their paths are heading towards Koovathur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X