இந்தியில் பேச சொன்ன எடிட்டர்.. வாஜ்பாய் டயலாக்குடன் கமல்ஹாசன் கொடுத்த ‛ரிப்ளை'.. அதிர்ந்த அரங்க
சென்னை: சென்னையில் ஆங்கில ஊடகமான என்டிடிவி சார்பில் அரசியல் கட்சி தலைவர்களிடம் பேட்டி எடுக்கும் சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். அப்போது கமல்ஹாசன், மறைந்த முன்னாள் பாஜக பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வரிகளை சுட்டிக்காண்பித்தது அனைவரையும் கவர்ந்தது. அதனை ஹிந்தி மொழியில் பேசும்படி பத்திரிகையாளர் கூறிய நிலையில் அதற்கு கமல்ஹாசன் கொடுத்த ரிப்ளை அரங்கத்தை கைத்தட்டால் அதிர வைத்தார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் உள்ளது. கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் வரை கேட்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் என்டிடிவி ஊடகத்தின் ‛NDTV Tamil Nadu Summit' என்ற பெயரில் அரசியல் கட்சி தலைவர்களிடம் பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
கமல்ஹாசன் பங்கேற்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக எம்பி கனிமொழி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேசினர்.
கமல்ஹாசனிடம் என்டிடிவி ஊடகத்தில் Executive Editor வீர்ராகவ் கேள்விகள் கேட்டார். அதற்கு கமல்ஹாசன் பதிலளித்து வந்தார்.
பாடல் அல்லது டயலாக்
பேட்டியின் கமல்ஹாசனிடம் ‛‛கடைசியாக உங்களை இங்கிருந்து சாதாரணமாக செல்ல அனுமதிக்க மாட்டேன். தற்போயைத தேர்தல் சூழலுக்கு ஏற்ப நீங்கள் ஒரு பாடல் பாட வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு ‛டயலாக்' சொல்ல வேண்டும்'' என்று வீர்ராகவ் கோரிக்கை வைத்தார்.
வாஜ்பாயின் கூற்றை சொன்ன கமல்
அதற்கு கமல்ஹாசன் சிரித்தபடி, ‛‛நான் அடல் பிஹாரி வாஜ்பாயின் கூற்றை சொல்ல விரும்புகிறேன். அரசுகள் வீழும்.. எழும்.. நாடு நகர்ந்து கொண்டே இருக்கும் நாளையே நோக்கி.. அந்த நாளை நமதாக்க வேண்டும்'' என்று கூறினார்.
ஹிந்தியில் பேச மறுத்த கமல்
இந்த வேளையில் என்டிடிவின் பத்திரிகையாளர், ‛‛தேசிய அளவில் உங்களுக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் இந்த வரிகளை நீங்கள் ஹிந்தியில் சொல்ல விரும்புகிறீர்களா?'' என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு கமல்ஹாசன், ‛‛இல்லை, நான் இதை டெல்லியில் சொல்லி கொள்கிறேன். இங்கு இருப்பது எங்களின் அறிவார்ந்த மக்கள்'' என்று கூறினார். இதை கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.












Click it and Unblock the Notifications