சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமல் மனதில் அதிரடி திட்டம்?.. திருவாரூரில் களம் இறங்குகிறது மநீம??

இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து 2 நாளில் முடிவெடுக்கப்படும் என கமல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். ஆனால் இந்த தொகுதியில் போட்டியிடுவது சம்பந்தமாக இதுவரை கமல்ஹாசன் எந்தவித கருத்தும் சொல்லவில்லை.

ஏற்கனவே அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி என நான்முனை போட்டி நிலவும் நிலையில் கமல் கட்சியும் களம் இறங்குமா என்ற எதிர்ப்பார்ப்பும் மேலோங்கி வருகிறது.

திருவாரூர் வேட்பாளராக கருணாநிதி குடும்பத்தினர் வேண்டாம்.. அதிரடி கருத்து கணிப்பு முடிவு திருவாரூர் வேட்பாளராக கருணாநிதி குடும்பத்தினர் வேண்டாம்.. அதிரடி கருத்து கணிப்பு முடிவு

நிலைப்பாடு

நிலைப்பாடு

ஆனால் திருவாரூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து வருகிற 5-ந்தேதி அதாவது நாளை சென்னையில் நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கமல் பேட்டி

கமல் பேட்டி

இந்நிலையில் இது சம்பந்தமாக கமல் பேட்டி அளித்துள்ளார். இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து கமல் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் சொன்னதாவது:

இரு தினங்களில் முடிவு

இரு தினங்களில் முடிவு

"திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யப்படும். பின்னர் நாளை அல்லது நாளை மறுநாள் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்கப்படும்" என்றார்.

விவசாயிகளுக்கு ஆதரவு

விவசாயிகளுக்கு ஆதரவு

தொடர்ந்து பேசிய கமல், உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கக் கூடாது என விவசாயிகள் போராடி வருவதை மக்கள் நீதி மையம் ஆதரிக்கிறது என்றும் கூறினார்.

English summary
MNM Kamalhasan says that, the results will be announced on 2 days to contest the Thiruvarur By election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X