அப்படி அள்ளிக்கொடுத்த மனுஷனுக்கு இப்படிதான் நன்றிக்கடன் செலுத்தனும்! கமல் செய்த அந்த காரியம்!
Recommended Video
சென்னை: கிரேஸி மோகன் உயிர் பிரியும் போது குடும்பத்தில் ஒருவராக நடிகர் கமல்ஹாசனும் அவரது நெற்றியில் கை வைத்து பிரியாவிடை கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான கிரேஸி மோகன், அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றதைதொடர்ந்து கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜ், ஆஹா, காதலா காதலா, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

உடனே சென்ற கமல்
அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்ற தகவலை அறிந்ததும் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு உடனடியாக சென்றுவிட்டார். கிரேஸி மோகனின் உயிர் பிரியும் போது கமல் குடும்ப உறுப்பினர்களை போல் உடனிருந்தார்.

பிரியாவிடை கொடுத்த கமல்
கிரேஸி மோகனின் உயிர் பிரியும் போது அவர் உடன் பிறந்த சகோதரரைபோல் கிரேஸி மோகனின் நெற்றியில் கை வைத்து அவருக்கு பிரியாவிடை கொடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நகைச்சுவை ஞானி
கிரேஸி மோகனின் மழலை மாறாத மனசை கண்டு பொறாமை படுவதாகவும் கிரேஸி என்பது அவருக்கு பொருந்தாத பட்டம், நகைச்சுவை ஞானி என்று கமல்ஹஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். தனது சகோதரர்கள் சாருஹாசன், சந்திரஹாசன் போல மோகன்ஹாசன் என்றும் சொல்லும் அளவுக்கு கமலுக்கு நெருக்கமானவர் கிரேஸி மோகன்.

ஒரே வேவ்லென்த்
கிரேஸி மோகன் இல்லாவிட்டாலும் அவரது கலை மற்றும் குடும்பத்தினருடனான நட்பு தொடரும் என்கிறார் கமல். கமலின் வேவ்லென்த்தும் கிரேஸி மோகனின் வேவ்லென்த்தும் பெரும்பாலும் ஒன்றாகவே இருந்துள்ளது.

தீனி போட்ட டயலாக்
அதற்கு பெரும் சான்று இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள். ஒரு காமெடியை ரசித்து சிரித்து முடிப்பதற்குள் அடுத்தக் காமெடியை உட்புகுத்தி பிரமிக்க வைப்பவர்தான் கிரேஸி மோகன். மைக்கெல் மதன காமராஜன் படத்தில் வரும் டயலாக்குகள் கமலின் டயலாக் டெலிவரிக்கும் நடிப்புக்கும் தீனி போட்டது என்றால் மிகையல்ல.
வழியனுப்பிய கமல்
குறிப்பாக காமேஷ்வரன் கதாப்பாத்திரத்திற்கான கிரேஸி மோகனின் வசனங்கள் இன்று அல்ல என்றும் நிலைத்து நிற்கும். அனைத்து வகையிலும் நெருக்கமான கிரேஸி மோகனை உடன் பிறந்தவர், குடும்பத்தில் ஒருவராக வழியனுப்பியுள்ளார் கமல்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications