பிக்பாஸில் அரசியல்... இந்த சீசனையும் விட்டு வைக்காத கமல்ஹாசன்
Recommended Video
சென்னை: விஜய் டிவியில் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 3-ல் அரசியல் வசனங்களை சற்றே காட்டமாகவே வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 இன்று இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அரசியலை வெளிப்படுத்திவிட்டார் கமல்ஹாசன்.

தம்மைப்பற்றிய ஆவணப்படத்தில் சிந்தனையை செழுமைப்படுத்தியது தொடர்பாக கமல்ஹாசன் பேசும் காட்சியில் தந்தை பெரியார் சிலை ஒரு குறியீடாக காட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து பார்வையிட்ட கமல்ஹாசன், நீச்சல் குளத்தைப் பற்றி பேசினார்.
வெளியில் மக்கள் அவதிப்படும் போது இங்கே நீச்சல் குளத்தில் குளியல் போட்டால் சரியாக இருக்காது என்பதால் நீரை நிரப்ப வேண்டாம் என சொல்லியிருந்தேன். அதை செய்திருக்கிறார்கள் நன்றி எனக் கூறினார்.
பின்னர் படுக்கை அறைகளுக்கு சென்ற போது இரு பெண்கள் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். கமல்ஹாசன் அவர்களை முதலில் அழைத்துப் பார்த்தார். பதில் வரவில்லை. பின்னர் இந்தியில் பேசத் தொடங்கினார்.
அப்போது ஒரு பெண் தமிழ்தான் என்று சொல்ல..நல்ல வேளை தமிழ்நாட்டில் தமிழருக்கு வேலை கிடைத்திருக்கிறது என வெளிமாநிலத்தவர் ஆதிக்கத்தை கோடிட்டுக் காட்டினார். அத்துடன் வந்தாரை வாழவைக்கும் என சிலேடையாக பேசிவிட்டு நகர்ந்தார்.
தமிழீழத்தைச் சேர்ந்த செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தெனாலி பட வசனத்தை பேசுமாறு கமல்ஹாசனை அவர் கேட்டுக் கொண்டார். தெனாலியாக இல்லாமல் கமல்ஹாசனாகவே கதைக்கிறேன் என ஈழத் தமிழில் உக்கிரமாக வசனங்களைக் கொட்டிவிட்டார்.
அநீதி கண்டு பொங்க வேண்டும்; அநீயை எதிர்க்கும் மையப் புள்ளியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சரவெடி வசனங்களை உதிர்த்தார். மேலும் பாரதி சொன்னது போல ரெளத்திரம் பழகிக் கொண்டிருக்கிறேன் என மீசையை முறுக்கிக் காட்டினார். நீங்களும் ரெளத்திரம் பழக வேண்டும் என்று பொதுமக்களையும் கேட்டுக் கொண்டார்.
மக்கள் நீதி மய்யம் தொடங்கி லோக்சபா தேர்தலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் கமல்ஹாசன், மக்களோடு உரையாடும் வாய்ப்பை கொடுத்திருக்கும் பிக்பாஸை அப்படி ஒன்றும் ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நடத்தமாட்டார்... தலைப்புச் செய்தியாக்கிவிட்டுத்தான் ஓய்வார் என்பதை இன்றைய தொடக்கமே வெளிப்படுத்திவிட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications