ஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு!
நாளை கமல் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியிடக்கூடும் என்கிறார்கள்
சென்னை: ரஜினியின் இன்றைய ஆலோசனை நடந்து முடிந்த சூட்டோடு, நாளை கமல் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்... இதற்கான அறிவிப்பையும் அவர் அறிக்கை விடுத்துள்ளதால், தமிழக அரசியலே பெரும் சூடாகி வருகிறது!
கமலை பொறுத்தவரை, அதிமுக, திமுக என்ற வித்தியாசம் இல்லை.. ஊழலுக்கு எதிரான முன்னெடுப்பு என்பதுதான் அவர் கொள்கை.. இதை முன்னிறுத்திதான் வரும் தேர்தலிலும் போட்டியிட போகிறார்..

இதில், ரஜினியின் அரசியல் வரவையும் பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிகம் எதிர்பார்த்தது கமல்தான்.. கடந்த வருஷமே ரஜினியோடு கூட்டணி அமைக்கத் தயார் என்று கமல்ஹாசன் சொல்லி இருந்தார்.. ஆனாலும், ரஜினி கமலின் எதிர்பார்ப்பையும் பொசுக்கிவிட்டார்.. ஒருவேளை இனிமேல், கமலுக்கு ரஜினியின் ஆதரவு இருக்குமா? அல்லது கட்சி ஆரம்பித்து கமலுடன் இணைவாரா? வெறும் வாய்ஸ் மட்டும் தருவாரா என்பது வழக்கம்போல சஸ்பென்ஸ்தான்!
இதனிடையே மற்றொரு செய்தியும் கசிந்தது.. "அவர் வர்றார்,இவர் வர்றார்னு நாம யாருக்காகவும் காத்திருக்கவில்லை.. காத்திருக்கவும் வேணாம்.. யாருடைய வருகைக்காகவும் காத்திருக்காமல் நம்முடைய பணியை மக்களுக்கு நேர்மையாக ஆற்ற முன் வந்திருக்கிறோம் என்று செயற்குழு கூட்டத்திலும் கமல் பேசியதாக ஒரு பேச்சு அடிபட்டது.
இந்நிலையில், இன்று ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.. அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்றும் மன்றம் சார்பில் கூறப்பட்டு வருகிறது.. ரஜினி எந்த முடிவு எடுக்க போகிறார் என்ற ஆவல் அடங்கும்முன்பே, நாளை செய்தியாளர்களை கமல் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.. கட்சி ஆபீசில் காலை 11 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளதாக மநீம சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதான் பரபரப்பை கிளப்பி வருகிறது.. கமல் என்ன சொல்ல போகிறார்? எதற்கான சந்திப்பு இது? ஒருவேளை ரஜினியும், கமலும் சேர்ந்துதான் அடுத்தடுத்த அதிரடிகளை தர தயாராகி வருகிறார்களா என்று தெரியவில்லை.. ஆனால், வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் கட்சிகளில் ஒன்றாக மநீம உள்ளது.. கழகங்களை காலி செய்யும் வகையில் கமல் ஏதாவது அஸ்திரத்தை நாளை ஏவுவாரா? என்பது நாளை தெரிந்துவிடும்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications