சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதெல்லாம் உண்மையா.. கமல் எடுத்த "அந்த" முடிவு.. என்ன காரணம்.. "மய்யம்" செல்வாக்கு பெருகுகிறதா..?

கமல் 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: வர வர எல்லாருமே ஜெயலலிதா பாணியை கையில் எடுத்து வருகிறார்கள்.. அந்த வகையில் கமலும் அப்படி ஒரு உத்தியை கையாள போகிறாராம்.. இந்த அணுகுமுறைதான் மய்யத்தினருக்கு பெரும் உற்சாகத்தை தந்து வருகிறது.

கமலை பொறுத்தவரை இந்த தேர்தலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நபராக கருதப்படுகிறார்.. இதற்கு காரணம், ஒருகுறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை கமல் பிரிக்க கூடும் என்பதால்தான்..

அதனாலேயே திமுக, மநீமய்யத்துடன் கூட்டணி வைக்க விடாமல் முயன்று வருவதாகவும் தெரிகிறது. இதற்கு கமல்தான் பிடிகொடுக்காமல் நழுவி கொண்டும் இருக்கிறார்.

 பொதுக்குழு

பொதுக்குழு

இதனிடையே, தன்னுடைய கட்சியை பலப்படுத்துவது, பொதுக்குழுவை கூட்டுவது, விருப்ப மனு தாக்கல் என அடுத்தடுத்த விஷயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளார்.. அதுமட்டுமல்ல, சென்ற முறையே கமல் தேர்தலில் நேரடியாக போட்டியிடாதது விமர்சனத்தை தாங்கி வந்தது.. கட்சி தலைவரே போட்டியிடா விட்டால் எப்படி? மற்றவர்களை விட்டு ஆழம் பார்க்கிறாரா? என்ற கேள்விகளும் எழுந்தன.

மயிலாப்பூர்

மயிலாப்பூர்

இந்த முறை அதற்கெல்லாம் வாய்ப்பே தரவில்லை.. கண்டிப்பாக தொகுதியில் போட்டியிட போகிறார்.. அந்த வகையில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடக்கூடும் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.. கமலுக்கு சொந்த ஊர் பரமக்குடி என்றிருக்கும்போது, மதுரை பகுதியில் போட்டியிட்டால் செல்வாக்கினால் எளிதாக ஓட்டுக்களை பெற முடியுமே என்று சொலலப்பட்டு வரும் நிலையில், கமல் மயிலாப்பூரை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 2 தொகுதிகளா?

2 தொகுதிகளா?

இந்த தகவல் உறுதியாகும் முன்னமேயே, இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. மயிலாப்பூரை அடுத்து, தி.நகர் தொகுதிகளில் போட்டியிட கமல் திட்டமிட்டுள்ளாராம்.. மநீம 4-ம் ஆண்டு துவக்க விழா, 21ல், ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி ஆபீசில் நடக்க போகிறது.. அன்றைய தினம் தான், கூட்டணி கட்சிகள் குறித்து உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.. அன்றைய தினமே கமல் போட்டியிடும் தொகுதிகளும் வெளியாகும் என தெரிகிறது.

 என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்த 2 தொகுதிகளுக்கும் கமல் குறி வைக்க என்ன காரணம்? இந்த 2 தொகுதிகளிலுமே சமுதாய வாக்குகள் நிறைந்திருக்கின்றன.. அந்த வகையில் கமலை விட்டுத்தர மாட்டார்கள் என்றே நம்பலாம்.. இன்னொரு காரணமும் சொல்கிறார்கள், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்தான் மய்யத்திற்கு ஓட்டு வங்கி அதிகமாக இருந்தது... இது கடந்த எம்பி தேர்தலில் வெளிப்பட்டது..

மய்யம்

மய்யம்

அதனால், சமுதாய ஓட்டுக்களுடன், இந்த செல்வாக்கும் சேர்ந்தால், அது கமலுக்கு பல மடங்கு ஓட்டு வங்கியை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது. அதனால்தான், தென்சென்னைக்கு உட்பட்ட, திநகர், அல்லது மயிலாப்பூரில் அல்லது இரண்டிலுமே கமல் போட்டியிட விருப்பப்படுகிறார் போலும். ஒரே நேரத்தில் 2 இடங்களில் போட்டியிடுவது ஜெ.பாணி அரசியல் என்றாலும், கமலுக்கு எந்த அளவுக்கு சாதகத்தை பெற்று தரும் என்பது எதிர்ப்பார்ப்புக்குரிய ஒன்றுதான்..

புதுபாணி

புதுபாணி

கமல் எங்கு நின்றாலும் வெற்றி பெற முடியாது, வேண்டுமானால் ஓட்டுக்களை பிரிக்கலாம், இவருக்கு டெபாசிட் கிடைத்தாலே அது வெற்றி பெற்றது மாதிரிதான் என்ற பேச்சுக்கள் எழாமல் இல்லை.. அதேசமயம், "பழிபோடும் அரசியலும் அல்ல,பழிவாங்கும் அரசியலும் அல்ல.. இது வழிகாட்டும் அரசியல்" என்ற கமலின் புதுபாணி அவருக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சாத்தியத்தை வகுத்து கொண்டுள்ளது என்பதையும் மறுக்க முடியாது... பார்ப்போம்..!

English summary
Kamalhasan may contest in two constitution, sources say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X