அரசியலில் சுகாதாரம் முக்கியம்... சென்னையில் கமல்ஹாசன் பேச்சு!
Recommended Video

சென்னை : அரசியலில் சுகாதாரம் முக்கியம் அதனைத் தான் மக்கள் நீதி மய்யம் கட்சி செய்து வருகிறது என்று அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது, 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு 80 சதவிகிதம் களப்பணியாளர்கள் தயாராக இருக்கின்றனர், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எங்களது தேர்வு முறையில் பல்வேறு விஷயங்கள் இருப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது.
நாங்கள் இங்கே வந்திருப்பதற்கான காரணம் சுகாதாரமான அரசியலை உருவாக்கவே. சுகாதாரமான அரசியல் என்றாலே ஊழலற்ற நிர்வாகம் என்பது தான் பொருள். அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதை தின்னமாக நம்புபவர்கள் நாங்கள்.
[20 தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்: கமல்ஹாசன் அறிவிப்பு ]

உறுதியளிக்கும் மக்கள்
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தேர்தல் முறைகேடு, அந்த முறைகேட்டை சரிசெய்து சரியான அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறோம். எங்களது முயற்சிக்கான வெற்றி மக்கள் கண்ணில் தெரிகிறது. நான் செல்லும் இடத்திலெல்லாம் நான் வாக்குறுதி கொடுப்பதில்லை அவர்களிடம் இருந்து வாக்குறுதிகளை வாங்குகிறேன்.

மாறும் என நம்புகிறேன்
வாக்கிற்கு பணம் வாங்கி தவறு செய்துவிட்டோம், இனி அப்படி செய்ய மாட்டோம் என்று எனக்கு வாக்குறுதி அளிக்கின்றனர். அதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.

இகழ்வது கிடையாது
எந்த நாடாக இருந்தாலும் மக்கள் ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள், என்றாவது ஒரு நாள் ஜனநாயகம் ஜெயிக்கும் என்பதை நம்புவோம். பிறரை இகழ்ந்து செய்யும் அரசியலை நாங்கள் செய்யவில்லை, எதிர்ப்பாக இருந்தாலும் அதனை கடிந்து சொல்வது கிடையாது. நான் குழலோ, ஊதுகுழலோ அல்ல நான் வெறும் கருவி.

விரைவில் சுற்றுப்பயணம்
நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது, இலக்கை நோக்கி விரைவாக பயணிக்கிறோம் என்பது மட்டும் தெரிகிறது. 2 நாட்களில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications