பெற்றோருக்கு பயந்து நாய் கடித்ததை மறைத்ததால் நடந்த துயரம்.. காஞ்சிபுரம் சிறுவனுக்கு இப்படியா ஆகணும்
காஞ்சிபுரம்: தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் நாய் கடித்து 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் திட்டுவாங்க என பயந்து போய் நாய் கடித்ததை சிறுவன் சொல்லாமல் இருந்து இருக்கிறார். இதில் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சாலையில் நடந்து சென்றாலே கடிக்கப் பாய்வதாகவும் ஒரு சில தொடர்ந்து மாநகராட்சிகளுக்கு புகார் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். எனினும் இந்த சம்பவம் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் தான் காஞ்சிபுரத்தில் தெரு நாய் கடித்ததில் 9 ஆம் வகுப்பு மாணவன் பலியாகி உள்ளான். காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சின்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான பாஸ்கரின் மகன் சபரிவாசன் (வயது 14). சபரிவாசன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளி சென்று விட்டு வீட்டில் இருக்கும் நேரம் நண்பர்களுடன் அப்பகுதியில் விளையாடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டின் வெளியே நண்பர்களுடன் சபரிவாசன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்துள்ளது. இதில் சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
எனினும் நாய் கடித்தது குறித்து பெற்றோரிடம் எதுவும் கூறாமல் இருந்திருக்கிறான். நாய் கடித்ததை சொன்னால் பெற்றோரிடம் அடிப்பார்கள் என பயந்துபோய் அதை சொல்லாமலேயே மறைத்துள்ளான். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிவாசனின் செயல்களில் சற்று மாறுபாடு தெரிந்தது.
வழக்கம் போல் இல்லாமல் அவனது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. இதையடுத்து தந்தை பாஸ்கர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சபரிவாசனை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு ரேபிஸ் நோய் முற்றி இருந்தது தெரியவந்தது. மேலும் சிறுவனும் நாய் போன்று செயல்பட்டதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காததால் உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த சபரிவாசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோர் திட்டுவார்கள் என்று நினைத்து நாய் கடித்ததை மறைத்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications