மீண்டும் திணறுது சென்னை.. ஞாயிற்றுக்கிழமைன்னாலே இதான்.. செங்கல்பட்டு டூ காஞ்சிபுரம்.. நோட் பண்ணுங்க
சென்னை: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு & சென்னை மாவட்ட மக்களுக்காக தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. என்ன அது?
தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்காக, அவ்வப்போது ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். இதில், முக்கிய போக்குவரத்து நிகழும் மாநகராக சென்னை திகழ்ந்து வருகிறது. அதனால்தான், புறநகர் ரயில் போக்குவரத்து சேவையில் அடிக்கடி இதற்கான மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த வாரம் ஆவடி பணிமனையில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக 15 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், அந்த ரயில்களின் விவரங்களையும் கூறியிருந்தது.
லீவு நாட்கள்: ஆனால், வார இறுதி நாட்களின்போதுகூட, இப்படி ஒரு அறிவிப்பு வரவும், சென்னைவாசிகள் அதிர்ந்துபோய்விட்டார்கள். மொத்தமாக இத்தனை ரயில்களின் சேவைகளும் இல்லாதது, வழக்கமாக செல்லும் பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது.
கடந்தவாரம்தான் இப்படியென்றால், இந்த வாரமும் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
ஏற்கனவே சென்னையை பொறுத்தவரை, மின்சார ரெயில்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருவதாக பயணிகள் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், பராமரிப்பு பணி காரமாக கடந்த 2 வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக, வேதனை தெரிவிக்கிறார்கள் ரயில் பயணிகள்.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பு இதுதான்: "சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி
முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணம்: சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications