யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மேலும் 15 நாட்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. அக்டோபர் 16 வரை சிறை
சென்னை: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அவருக்கு மேலும் 14 நாட்கள் அதாவது அக்டோபர் 16ஆம் தேதி வரை காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Twin throttlers எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் அவ்வப்போது பைக் ஓட்டும் வீடியோக்களை தனது சேனலில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு 2 கே கிட்ஸ்கள் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர்.

இவர் பைக் ஓட்டும் சாகசங்களை பார்த்து பூரித்து போய் அவருடைய யூடியூப் சேனலுக்கு ஏராளமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் கூட பைக்கில் அதிவேகமாக செல்வது, சாகசங்களை நிகழ்த்துவது உள்ளிட்டவைகளை செய்து வருகிறார்.
இவருக்கு 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு வட இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் 247 கி.மீ. வேகத்தில் இவர் சென்ற வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே தனது பைக்கில் வாசன் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கி பெரும் சேதத்திற்குள்ளானது. அவருடைய பைக் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் சிக்கினாலும் வாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவரை கைது செய்த காஞ்சிபுரம் போலீஸார் இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அன்றைய தினமே அவர் ஜாமீன் கோரினார். ஆனால் ஜாமீன் மனுவை நீதிபதி இனிய கருணாகரன் தள்ளுபடி செய்தார். கடந்த வெள்ளிக்கிழமை (செப் 22 ஆம் தேதி) அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் எண் 2 இல் நீதிபதி செம்மல் முன்னிலையில் ஜாமீன் கேட்டு வாசனின் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர்.
இந்த ஜாமீன் மனு மீது வழக்கு விசாரணை நடந்த நிலையில் வாசன் மீது விபத்து ஏற்படுத்தும் வழக்குகள் தொடர்ந்து வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி மீண்டும் வாசன் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை காஞ்சிபுரம் மாவட்டம் , அமர்வு நீதிமன்றம் 2 இல் நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தது.

வாசனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாசனின் வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞரோ அவருக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என வாதிட்டார். இதையடுத்து இன்னும் இந்த வழக்கில் புலனாய்வு விசாரணை முடியாததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாது என்றார்.
இந்த நிலையில் இன்றுடன் வாசனின் நீதிமன்றக் காவல் முடிவடையும் நிலையில் அவர் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் நீதிபதி இனியா கருணாகரன் முன்பு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அதன்படி வாசன் அக்டோபர் 16 ஆம் தேதி வரை புழல் சிறையில் இருப்பார். இதனிடையே காஞ்சிபுரத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுவிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வாசன் தரப்பினர் மனு தாக்கல் செய்ய அவருடைய வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications