சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் கற்றுக்கொடுத்தவர் சகோதரி கனிமொழி.. அதிமுக எம்.பி புகழாரம்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக செய்தி தொடர்பு செயலாளரும், எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவனின் மகள் திருமண விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: 4 பேர் கொண்ட குழு அமைத்த பாஜக - சிபிஐ விசாரணை கேட்கும் வானதி சீனிவாசன் தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: 4 பேர் கொண்ட குழு அமைத்த பாஜக - சிபிஐ விசாரணை கேட்கும் வானதி சீனிவாசன்

இந்த திருமண விழாவில் பல்வேறு சுவாரஸ்யங்கள் அரங்கேறின. அரசியல் களத்தில் எதிரும், புதிருமாக இருப்பவர்கள் ஒரு சேர திருமண விழாவில் பங்கேற்றனர்.

திருமண விழாவில் சுவாரஸ்யங்கள்

திருமண விழாவில் சுவாரஸ்யங்கள்

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த திருமண விழாவில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசிய பேச்சுதான் இப்போது ஹாட் டாபிக்காக உள்ளது.

கற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தேன்

கற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தேன்

திருமண விழா மேடையில் பேசிய நவநீதகிருஷ்ணன் கூறுகையில், 'திருமண விழாவில் என்னுடைய மேடை பேச்சு சரியாக இருக்காது. அதுவும் திமுகவினர் முன்னிலையில் பெரிய ஹீரோவாக இருக்க விரும்பவில்லை, மாநிலங்களவைக்கு நான் சென்றபோது எனக்கு பல விஷயங்கள் தெரியாது.
பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தேன்.

சகோதரி கனிமொழி கற்றுக் கொடுத்தார்

சகோதரி கனிமொழி கற்றுக் கொடுத்தார்

இப்போதும் இருக்கிறேன். அப்போது டிகேஎஸ், டி.கே.ரங்கராஜன், கனிமொழி எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். ஒரு முறை மத்திய அமைச்சருடன் விவாதித்தபோது அனுபவம் இல்லாத காரணத்தால் சண்டை போடும் நிகழ்வு நடந்தது. அப்போது சகோதரி கனிமொழி பொறுமையாக இருங்கள் நான் பேசுகிறேன் என்று சொன்னார். நான் சர்ச்சையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதையும் கனிமொழி எனக்குக் கற்றுக் கொடுத்தார். தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அதிக பற்று கொண்டவர் சகோதரி கனிமொழி. ஆர்எஸ் பாரதியும் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்' என்று நவநீதகிருஷ்ணன் பேசினார்.

இதுதான் தமிழ்நாடு

இதுதான் தமிழ்நாடு

அதிமுகவும், திமுகவும் அரசியல் களத்தில் எதிரும், புதிருமாக இருந்து ஒருவரை ஒருவர் வார்த்தையால் தாக்கி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின், திமுகவினர் முன்னிலையில் அதிமுக எம்.பி, கனிமொழியை பாராட்டி பேசியது முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுகவினரை வியப்பில் ஆழ்த்தியது. இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் நாகரிகம் என்று திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் பேசிக் கொண்டனர்.

English summary
AIADMK MP Navaneethakrishnan spoke in the presence of Tamil Nadu Chief Minister Stalin that Kanimozhi had taught me how parliamentary events take place. This is the political civilization of Tamil Nadu, said those present at the wedding
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X