ஒரே நாடு என எப்போதும் சொல்றீங்க.. அப்புறம் ஏன் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் இத்தனை பாகுபாடு? கனிமொழி
சென்னை: தென்னக ரயில்வே திட்டங்களைவிட வடக்கு ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக திமுக எம்பி மக்களவையில் குற்றம்சாட்டினார்.
Recommended Video
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது, மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.பி கனிமொழி பேசினார்.
அவர் பேசுகையில், ரயில்வே பட்ஜெட் விவாதத்தில், ரயில்வேத் துறையை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது. ஒன்றிய அரசை குறை சொல்லவில்லை. ஆனால் முந்தைய அரசு மீது பழிபோடுவது ஏற்கத்தக்கது அல்ல.

லாபத்தில் இயங்கும் ரயில்
ரயில்வே பட்ஜெட் விவாதத்தில், "லாபத்தில் இயங்கும் ரயில்களை, ஒன்றிய அரசு தனியாருக்குத் தாரை வார்க்கிறது. நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டுமே ஒன்றிய அரசு இயக்குகிறது. ரயில்வே துறையில் தென்னிந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன.

மொழி தெரியாத பணியாளர்கள்
மொழி தெரியாத பணியாளர்களால் மக்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த பெட்டிகள் நீக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளாக ரயில்வே துரையின் நிதிச் செயல்பாடுகள், குறைத்து ஒதுக்கப்பட்ட நிதியைக் கூட முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

ஒரே நாடு
சரிசெய்யப்பட வேண்டியது, நிறைய இருப்பினும் ஏன் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தாமல் இருக்கிறது. தெற்கு ரயில்வேக்கு 59 கோடி மட்டும், வடக்கு ரயில்வேக்கு 13200 கோடி நிதி ஒதுக்கீடு. One Nation என்று எப்போதும் பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக் கூடாது.

பணியிடங்கள் நிரப்பவில்லை
இந்த நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உங்களால் ஏற்படுத்தித் தர முடியவில்லை. இந்தியா முழுக்க ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 2.65 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களையும் நிரப்பாமல் அப்படியே வைத்திருக்கிறது என நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்பி பேசினார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications