தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனத்தின் புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிப்பு-கனிமொழி, உதயநிதி எதிர்ப்பு
சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனமான NCERT நடத்தும் புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மகாத்மா காந்தி அடிகளின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் NECRT புதிர் போட்டியை தமிழகத்திலும் நடத்துகிறது. ஆன்லைனில் இந்த புதிர் போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியானது ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்ட மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனம் தமிழகத்தில் நடத்திய புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி எம்.பி. ட்விட்டரில், தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் நடத்தும் ஒரு புதிர் போட்டியில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழோ,ஆங்கிலமோ தெரியாமல் தாய்மொழி மட்டுமே அறிந்த குழந்தைகள் ஏராளமானோர் இருப்பதால்,இப்போட்டி அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதேபோல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications