Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு
சென்னை: நானும், முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவும் கிறிஸ்தவர்கள் நடத்தும் ஒரு பள்ளிதான் படித்தோம்! கலைஞர் கொடுத்த டிவி இன்றும் இயங்கி கொண்டிருக்கிறது என மணப்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் பரப்புரையில் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
மணப்பாறை சட்டசபை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமத்தை ஆதரித்து கனிமொழி எம்.பி தேர்தல் பரப்புரை

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., உச்சி சூரியனினும் உதய சூரியனுக்காக நீங்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்க்கும்போது, வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் தெரிகிறது. நம்முடைய வேட்பாளர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் அப்துல் சமத்துக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
எல்லோராலும் நேசிக்கப்படக்கூடிய ஒரு வேட்பாளர். எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடிய, எந்தவித வேற்றுமையும் இல்லாமல் அன்போடு நடந்து கொள்ளக்கூடியவர். மறுபடியும் மக்கள் பணியை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பை, நீங்கள் அவருக்கு உருவாக்கித் தர வேண்டும்.
தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள மக்களுக்குப் பல்வேறு பணிகளை செய்துள்ளார். தொகுதி அளவில் அனைத்து ஊராட்சிகள், ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் குக்கிராமங்களுக்கு நேரடியாக சென்று களப்பணிகளை செய்து வருகிறார். மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் நீண்ட வருட கோரிக்கையான அரசு கல்லூரி அப்துல் சமது அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக கொண்டுவரப்பட்டது.
புத்தாநத்தம் முதல் துவரங்குறிச்சி வரையிலான தேசிய நான்கு வழிச்சாலை நீண்ட வருட கோரிக்கையாக இருந்தது, அதையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். தொகுதி அளவில் பல்வேறு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.
நம் திமுக தலைவர் செயல்படுத்திய திட்டங்களை அனைத்தையும் மக்கள் மத்தியில் சிறப்பாக கொண்டு சேர்த்துள்ளார். திமுக நிர்வாகிகளோடு இணக்கமாகவே செயல்பட்டு வருகிறார். தொகுதி சார்ந்த முன்னெடுப்புகள் மற்றும் செயல்முறைகள் அனைத்தையும் கழக நிர்வாகிகளோடு ஆலோசித்து, இணைந்து செயலாற்றி வருகிறார்.
நமது கூட்டணி என்பது கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கூட்டணி, எதிரணியில் உருவாகியுள்ள கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக், வேளாண் திருத்தச் சட்டம் , ஹிந்தி திணிப்பு, கீழடியுடைய ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொன்னதாக இருக்கட்டும் நிதி பகிர்வு உள்ளிட்டவை ஆதரவளித்தவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டைப் பற்றி அக்கறை இல்லாத கூட்டணி. தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கக்கூடிய கூட்டணி.
பாஜக ஒரு பெரிய "வாஷிங் மெஷின்" வைத்துள்ளது. யார் மீது எந்த வழக்கு இருந்தாலும், பாஜக கூட்டணியில் இணைந்தவுடன் அவர்கள்மீது உள்ள அனைத்து வழக்குகளும் கைவிடப்படுகின்றன. IT, CBI, ED போன்ற அமைப்புகளை டெல்லியில் "ICE" என்று கூறுவார்கள்.
இது தமிழ்நாட்டுக்கும் நாக்பூருக்கும் இடையிலான போர். ஒரு விதத்தில் பார்த்தால், இது கீழடியும் நாக்பூரும் இடையிலான போர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து நல்ல எதிர்காலத்திற்காக வாழ வேண்டும். இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கலாச்சாரத்துக்கும், அதன் அரசியலுக்கும் எதிராக நடைபெறும் ஒரு போராட்டம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் என்றால் என்ன? வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் செயல்படும், மக்களுக்கு சேவை செய்யக்கூடிய என்.ஜி.ஓ.க்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும். அந்த நிதியின் மூலம் அவர்கள் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேற்கொள்கிறார்கள்.
பெற்றோர் இல்லாத குழந்தைகள் சேர்ந்து படித்து வாழ்வதற்காக விடுதிகள் அமைக்கப்படுகின்றன. நானும் அப்படிப்பட்ட ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனத்தில் படித்திருக்கிறேன். சென்னை சர்ச் பார்க் பகுதியில் உள்ள, கிறிஸ்தவர்கள் நடத்தும் ஒரு பள்ளிதான் அது. அதே பள்ளியில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படித்தார்கள்.
நான் மட்டும் அங்கே படித்தேன்" என்று சொல்லி அதற்கான ஒரு கதையையும் கூறுவார்கள். ஆனால், எனக்கு முன்னரே அங்கே படித்தவர் ஜெயலலிதா அவர்கள். இவ்வாறு வெளிநாட்டு நிதியை பெற்று, இங்கு மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. முதியவர்களுக்கான சேவை மையங்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், இத்தகைய சேவைகளை கட்டுப்படுத்தவும், குறிப்பாக இஸ்லாமியர், கிறிஸ்தவர் போன்ற சமூகங்களின் அமைப்புகளையும், அரசின் கொள்கைகளை எதிர்த்து கேள்வி எழுப்பும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த என்.ஜி.ஓ.வை ஏன் மூட வேண்டும்? அவர்களுக்கு வந்த நிதியை நாங்களே எடுத்துக்கொள்வோம்; வேண்டுமானால், உங்களுக்கு வழங்கப்பட்ட அந்த உரிமையையும் பறித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையுடன், காரணம் கூறத் தேவையில்லாத ஒரு ஒடுக்குமுறை சட்டத்தை கொண்டு வருகின்றனர். நம்முடைய முதலமைச்சர் அதற்கு எதிராக கேள்வி எழுப்புகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, இதற்கு எதிராக ஒரு முணுமுணுப்பையும் வெளிப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
-
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications